சியோமி நிறுவனம் தனது அடுத்த பிளாஷ் சேல்-க்கான அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு சியோமி இன் சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போன் இன் பிளாஷ் சேல் விற்பனையைத் துவங்குமென்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ வின் பிளாஷ் சேல் விற்பனை அமேசான் இன் Amazon.in தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ தளமான Mi.com மி ஸ்டோர் இல் இன்று துவங்குகிறது.

பிளாஷ் சேல் விற்பனை என்பதனால் குறைந்த யூனிட்களே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பேமென்ட் விபரங்களை சேவ் செய்து வைத்துக்கொள்ளுமாறு சியோமி நிறுவனம் டிப்ஸ் ஒன்றையும் சொல்லி இருக்கிறது.
இதற்கு முன் நடத்தப்பட்ட சியோமி பிளாஷ் சேல் விற்பனையின் பொது 20 நிமிடத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

– 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,999 – 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12,999

– கேஷ் பேக் சலுகையாக இரண்டு வேரியண்ட்களுக்கும் ரூ.2,200 வழங்கப்படுகிறது. – ஜியோ வின் ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் திட்டத்திற்கு 4.5 டிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. – வட்டி இல்லா மாதாந்திர தேவைத் திட்டம் என பல சலுகைகள் இன்றைய பிளாஷ் சேல் விற்பையில் வழங்கப்படுகிறது.

– 5.84 இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080×2280 பிக்சல் உடன் கூடிய 9:9 விகித நாட்ச் டிஸ்பிளே – 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் – 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் – 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட ரியர் டூயல் கேமரா – 5 மெகா பிக்சல் பிரென்ட் செல்பி கேமரா – ஆண்ட்ராய்டு ஓரியோ உடன் இணங்கும் MIUI 9 – டூயல் சிம் – 4ஜி வோல்ட்இ – ப்ளூடூத் – ஜிபிஎஸ் – 4000 எம்.ஏ.எச் பேட்டரி – 3.5 ஆடியோ ஜாக்

source: gizbot.com

Leave a Reply