சியோமி Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.21 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 88.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கிளாஸ் பேக் மற்றும் பிரத்யேக வாட்டர் டிராப் ஆர்க் டிசைன், 4 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 7-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI, 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 1.4µm பிக்சல், OIS, டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ், 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபி எடுக்க 20 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் பேக்கிரவுன்டு பிளர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டூடியோ லைட்டிங் எஃபெக்ட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi8 ஸ்மார்ட்போன் 3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் க்விக் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சியோமி Mi 8 / Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் சிறப்பம்சங்கள்:

– 6.21 இன்ச் 2248×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED டிஸ்ப்ளே – 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் – அட்ரினோ 630 GPU – 6 ஜிபி / 8 ஜிபி ரேம் – 64 ஜிபி / 128 ஜிபி – 8 ஜிபி ரேம் / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி எக்ஸ்ப்ளோரர் எடிஷன் – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9 – டூயல் சிம் ஸ்லாட் – 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா – 20 எம்பி செல்ஃபி கேமரா – IR ஃபேஸ் அன்லாக் (Mi 8) / 3D ஃபேஸ் அன்லாக் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்) – கைரேகை சென்சார் (Mi 8) / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன்) – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி – 3400 எம்ஏஹெச் பேட்டரி, QC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி Mi8 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சியோமி Mi8 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 2699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.28,460), 128 ஜிபி, 256 ஜிபி வேரியன்ட்கள் முறையே 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,620), 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,785) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi 8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 3699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 5-ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago