சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவரை சந்திக்க இருக்கின்றனர்.

இது பற்றி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறும்போது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.

நாளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு செல்கிறோம்.
அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எங்கள் கழக துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply