Categories: Featured

கடைசி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே! இந்திய கேப்டன் கோலி புலம்பல்!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது நாளை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா அணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
இதனையடுத்து அவர்கள் குறைந்தபட்சம் இரண்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில்நாளை தொடங்க இருக்கும் தொடரில் கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பங்கேற்க மாட்டார்கள் எனவும் மேலும் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கான தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவார்கள் என கருதப்படுகிறது.

ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் ரிசர்வ் வீரராக தான் உள்ளார். ஆனால் ஹர்டிக் பாண்டியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் அவருடைய பங்கு முக்கியமாக இருக்கும் அவரை நீக்கியுள்ளது அணியில் பின்னடைவாக கருதப்படுகிறது.

இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி நாளைய போட்டிக்கான அணித்தேர்வில் குழப்பம் இருப்பதை ஒப்புக்கொண்டார். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பிறகே அணித்தேர்வு குறித்து முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார். மேலும் வீரர்கள் தடை ஓய்வறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், ராகுல், பாண்டியா தங்களது தவறை உணர்ந்துள்ளார்கள் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

9 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

9 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

9 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

9 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

9 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

9 hours ago