திருச்சி என்ஐடி-யில் எம்எஸ்சி சேர்க்கை

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை தேர்வு (ஜாம்) மூலம் எம்எஸ்சி படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறியது: திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகமானது, இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், இயங்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும்.

2014ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய இக்கல்லூரியானது தேசிய நிறுவங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் மற்றும் ஒட்டுமொத்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடம் வகிக்கிறது.

சிறந்த ஆய்வு நிறுவனமாக இருப்பதுடன் பல முன்னணி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்கி வருகிறது என்றார். சகல வசதிகளுடன் எழில்மிகு வளாகத்தில் 10 இளநிலை, 28 முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி பயன்பியல் துறைகள் இரண்டாண்டுகள் படிக்கும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலைப் பிரிவில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதவியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) நடத்தும் தேசியளவிலான ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைத் தேர்வு (ஜாம்) மூலம் நடைபெறுகிறது.

முதுநிலை கணினி அறிவியலுக்கான ஜாம் தேர்வு கணிதப் புள்ளியியலை சார்ந்து நடைபெறும்.

2020-21ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2020ஆம் ஆண்டு ஜாம் தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை வழங்கும் துறைகள் குறித்த விவரங்களுக்கு வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றார் அவர்.

Share
Tags: dinamani

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago