சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு கட்டணம் உயர்வு

சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐந்து பாடங்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த பட்டியலின மாணவர்கள் இனி ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து பாடங்களுக்கு 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த மாணவர்கள் இனி 1500 ரூபாய் செலுத்தவேண்டும்.

12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்கு பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணமும் 300 ரூபாய் என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறுவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாததால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago