கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் விடுமுறை முடிந்து, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் தனியார் நர்சரி பள்ளிகள், 6ம் தேதி திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, கல்லுாரிகளுக்கான கோடை விடுமுறையும் முடிவுக்கு வருகிறது.மே மாதம் அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை, நாளையுடன் முடிகிறது. ஒன்றரை மாதத்துக்கு பின், மீண்டும், நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.புதிய கல்வி ஆண்டு துவங்கியுள்ள நிலையில், பிளஸ் 2 முடித்து, புதிய மாணவ – மாணவியர் கல்லுாரி படிப்புகளில் சேர்ந்திருப்பர்.அவர்களை சீனியர் மாணவர்கள், &’ராகிங்&’ செய்வது, கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என, பல்கலை மானியக் குழு சார்பில், கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் சார்பில், கல்லுாரிகளில், ராகிங்கை கட்டுப் படுத்துவது குறித்து, எந்த உத்தரவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என, பேராசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.புதிய மாணவர்களுக்கு, &’ஓரியண்டேஷன்&’ எனப்படும், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுமா; அவர்களுக்கு, கல்லுாரி கல்வி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago