Categories
கல்வி & வேலை

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: 1. டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (Driver Mechanical Transport) 2. எலக்ட்ரீசியன் (Electrician) 3. வைக்கிள் மெக்கானிக் (Vehicle Mechanic) 4. மல்டி ஸ்கில் ஒர்க்கர் (Cook)

காலிப்பணியிடங்கள்: 1. டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் – 388 2. எலக்ட்ரீசியன் – 101 3. வைக்கிள் மெக்கானிக் – 92 4. மல்டி ஸ்கில் ஒர்க்கர் – 197

மொத்தம் = 778 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்: அறிவிப்பாணை வெளியான தேதி: 31.05.2019 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2019

வயது வரம்பு: 1. மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

2. மற்ற பிற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்: 1. மல்டி ஸ்கில் ஒர்க்கர் பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.39,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

2. மற்ற பிற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.44,400 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்: 1. பொது / ஓபிசி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.50 2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பதாரர்கள் வங்கியில் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Commandant, GREF Centre, Pune-411 015, in Public Fund Account No. 11182905409 of State Bank of India, Khadi Branch, Pune Code No. 01629.

கல்வித்தகுதி: குறைந்தபட்சமாக, பத்தாம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் பணிகளுக்கேற்ப சான்றிதழ் படிப்பை பயின்றும், பணி அனுபவமும் பெற்று இருத்தல் வேண்டும்.

குறிப்பு: டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் போன்ற பணிக்கு, ஹெவி மோட்டார் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், http://www.bro.gov.in- என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

தேர்வு செய்யும் முறை: 1. உடற்தகுதி தேர்வு 2. செய்முறைத் தேர்வு 3. எழுத்துத் தேர்வு 4. மருத்துவத் தகுதித் தேர்வு

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://www.bro.gov.in/WriteReadData/linkimages/9558409500-Untitled.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply