கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி. 21ம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடியார்!

சென்னை: கல்விக்கென 24 மணி நேர தனி தொலைக்காட்சியை வரும் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்விக்கென தனி தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படும் என முன்னர் அறிவித்திருந்தார். அதன்படி வரும் 21 ஆம் தேதி கல்விக்கான தொலைக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இந்த சேனலின் ஸ்டூடியோ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் 8-வது மாடியில் செயல்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் சேனல் 200-வது எண்ணில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடர்பான பயிற்சி, போட்டித்தேர்வு, கல்வி உதவித் தொகை தகவல் போன்றவை நிபுணர்கள் மூலம் வழங்கப் படுகிறது.
மேலும் பள்ளிக்கல்வி துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கவும், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நேரலை மூலம் நிபுணர்களிடம் கேட்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

சுமார் 50 ஆசிரியர்கள் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சி சேனலில் விளம்பரம் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். இதில் 15 விதமான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இரண்டு முறைக்கு மேல் மறு ஒளிபரப்பு செய்யப்படும். இதன் மூலம் நிறைய மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு கல்வி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.. என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago