Categories: சமையல்

நாவூறும் பிரெட் உணவுகள் உங்களுக்காக

4 வகை ஈஸி பிரெட் டிஷ்

1. பாம்பே டோஸ்ட்:

தேவையானவை

பிரெட்_1பாக்

முட்டை_3

பால்_1/2 கப்

சர்க்கரை_1/2கப்

வெனில்லா எசன்ஸ்_1சிட்டிகை

ரீபைண்ட் ஆயில்

செய்முறை :

சர்க்கரையை மிக்ஸியில் நைசாக பொடி செய்து கொள்ளவும் அத்துடன் பால், முட்டை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும் இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
பின் பிரெட்டை நன்றாக இந்த கலவையில் டிப் செய்து தவாவில் எண்ணெய் விட்டு இருபக்கமும் சிவக்குமாறு டோஸ்ட் செய்யவும். மிருதுவான குழந்தைகள் விரும்பும் பாம்பே டோஸ்ட் தயார்.

2. பிரெட்அல்வா

தேவையானவை:

பிரெட் துண்டு _4

பால்_1/4 லிட்டர்

சர்க்கரை _1/2 கப்

நெய்_50மிலி

ஏலப்பொடி_1/4 டீஸ்பூன்

முந்திரி,டூட்டி ப்ரூட்டி_அலங்கரிக்க

செய்முறை:

பிரட்டினை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் பின் அடிகனமான கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, டூட்டி ப்ரூட்டி வறுத்து எடுத்துக்கொள்ளவும். பாதி நெய்யை கடாயில் விட்டு சூடான பின் பொடித்த பிரட்டை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும் அதில் பாலை ஊற்றி கெட்டியாகும் நேரம் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கடாயில் ஒட்டாமல் நெய் பிரிந்து அல்வா பதம் வந்தால் சுவையான பிரெட் அல்வா ரெடிமுந்திரி,டூட்டிப்ரூட்டி போட்டு அலங்கரிக்கவும். மிகவும் எளிமையான கெஸ்ட் வந்தால் ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய எளிமையான ஸ்வீட்.

3. சில்லி பிரெட்

தேவையானவை:

பிரெட்_6துண்டுகள்

பெரியவெங்காயம்_1(பொடியாக நறுக்கியது)

தக்காளி_1(பொடியாக நறுக்கியது)

சோயா சாஸ்_1/2 டீஸ்பூன்

டொமெட்டோ சாஸ்_1 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை _1/2 டீஸ்பூன்

மல்லி_பொடியாக நறுக்கியது

வெண்ணை _2 டேபிள்ஸ்பூன்

ரீபைன்டு ஆயில் சிறிது

சோம்பு_1 டீஸ்பூன்

கரமசாலாபொடி_1/4டீஸ்பூன்

மிளகாய்தூள்_1/2 டீஸ்பூன்

உப்பு_ருசிக்கேற்ப

செய்முறை:

பிரெட்டை ஓரங்கள் நீக்கிவிடவும் பின் அதில் லேசாக தண்ணீர் தொளித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கரமசாலா, வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். பின் இதில் மிளகாய்தூள், உப்பு, சோயாசாஸ், டொமேட்டோ சாஸ் சேர்த்து தணாணீர் தொளித்த பிரெட்டை போட்டு கிளரவும் கடைசியாக மல்லி, வெண்ணெய் சேர்த்து கிளறிபறிமாறவும். அருமையான சில்லி பிரெட் ரெடி வித்தியாசமானதும் குழந்தைகள் விரும்பகூடியதுமான ஈவினிங்க் டைம் ஃபுட்

4. பிரெட் ஸான்ட்விச்

தேவையானவை:

பிரெட்_1பாக்கெட்

வேகவைத்த உருளைக்கிழங்கு_ மூன்று

நெய்_50மில்லி

தக்காளி_2

பெரிய வெங்காயம் _1

மிளகாய்தூள்_1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்_1 சிட்டிகை

வெண்ணெய்_1 டேபிள்ஸ்பூன்

எண்ணெய்_3 டேபிள்ஸ்பூன்

உப்பு_ருசிக்கேற்ப

சர்க்கரை_1 டீஸ்பூன்

டொமெட்டோ கெட்சப்_1 டீஸ்பூன்

சோம்பு_1/4 டீஸ்பூன்

கரமசாலாதூள்_1/4 டீஸ்பூன்

மல்லி_பொடியாக நறுக்கியது_1/4 கப்

செய்முறை:

வாணலியில் எண்ணெயை ஊற்றி சோம்பு, கரமசாலாத்தூள், மிளகாய்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்கடைசியாக கெட்சப், சர்க்கரை, மல்லி, வெண்ணெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி எடுக்கவும். இரண்டு பிரெட் நடுவே இந்த கலவையை ஸ்டஃப் செய்து தவாவில் நெய் விட்டு டோஸ்ட் செய்தால் சுவையான பிரெட் சாண்ட்விச் ரெடி

இந்த 4 ரெசிபியும் செஞ்சு பார்த்து உங்களோட கருத்துக்களை எனக்கு பகிருங்கள் தோழிகளே. மேலும் எனக்கு தெரிஞ்ச சின்ன சின்ன சமையல் குறிப்பு எழுதிக்கோங்க

1. மிருதுவான சப்பாத்தி செய்ய வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைஞ்சு அதில் சப்பாத்தி தேய்ச்சு போட்டா பஞ்சு மாதிரி சாப்ட் சப்பாத்தி கிடைக்கும்

2. பிரியாணில உப்பு அதிகமாயிடுச்சா கவலையை விட்டுதள்ளுங்கள் 1 பெரிய வெங்காயத்தை நல்லா பொன்னிறமாகுற வரை வதக்கி போட்டு பாருங்க உப்பை சரி செய்திடலாம். பிரியாணி மணமாகவும் இருக்கும்.

3. மட்டன் சமைக்கும்போது மிருதுவா கறி மாறனும்னு நினைச்சீங்கனா அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து வேகவைச்சு பாருங்க கறி சாஃப்டா வெந்துடும்

Disclaimer: The opinions expressed in this post are the personal views of the author. They do not necessarily reflect the views of Momspresso.com (formerly mycity4kids). Any omissions or errors are the author’s and Momspresso does not assume any liability or responsibility for them.

By – Gayu RK

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

7 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

7 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

7 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

7 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

7 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

7 hours ago