சுசியம்:

என் சிறு வயது நினைவுகளில் மிக பசுமையான இடம் சுசியத்திற்கு உண்டு. பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் இருக்கும் ஒரு கடையில் இந்த வடையை சுட சுடப் போட்டுக் கொண்டு இருப்பார்கள். வாசனை சுண்டி இழுக்கும். தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றால் கண்டிப்பாக அப்பா இந்த வடையை வாங்கிக் கொடுப்பார்.

வெளியே மொறு மொறு வென்றும், உள்ளே அதற்கு நேர்மாறாக மென்மையாக இனிக்கும் இந்த வடை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.

இந்த வடையை செய்வது மிக எளிமையானதே. உணவு பல நினைவுகளை தூண்டி விடும் என்பது எவ்வளவு உண்மை! வாருங்கள், செய்முறையைப் பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:

பச்சரிசி – 3/4 கப்

உளுத்தம் பருப்பு – 3/4 கப்

உப்பு – தேவையான அளவு

பூரணத்திற்கு:

கடலைப்பருப்பு – 1 கப்

வெல்லம் – 1 கப்

ஏலக்காய் – 4 அல்லது 5

நெய் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

ஆயத்த வேலைகள்:

அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற விடவும்.

ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும் அல்லது ஏலக்காய் பொடி 1/4 தேக்கரண்டி பயன்படுத்தலாம்.

வெல்லம் தட்டி வைக்கவும்.

செய்முறை:

ஊற வைத்த அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக மைய , தண்ணீர் குறைவாக தெளித்து கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் பூரணத்தின் மீது மேல் மாவு நன்றாக ஒட்டாது. மாவில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பை வேக வைத்து எடுக்கவும். தட்டி வைத்த வெல்லத்தில் 3 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். வெல்லத்தில் இருக்கும் கசடுகளை நீக்கவே இவ்வாறு செய்கிறோம்.

வேக வைத்த கடலைப்பருப்பையும், வடிகட்டிய வெல்லத்தையும் அடி கனமான பாத்திரத்தில், மிதமான தீயில் கொதிக்க விடவும். இடை இடையே மசித்து விடவும். பொடித்த ஏலக்காய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு நெய் சேர்க்கலாம்.

நன்றாக தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும். பூரணம் ஆறியதும் நன்றாக இறுகி விடும். சின்ன சின்ன உருண்டைகளாக பூரணத்தை பிடிக்கவும்.

பிடித்து வைத்த உருண்டைகளை மேல் மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுசியம் தயார். இந்த அளவில் சுமார் 25 சிறிய சிசியம் கிடைக்கும்.

செய்முறையை கீழ் காணும்வீடியோவிலும்காணலாம்.

var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; switch (key){case “jw”: ids.forEach(function (id){if (id !=vid){var player = jwplayer(id); if(player.getState() === “playing”){player.pause();}}}); break; case “yt”: ids.forEach(function (id){if (id !=vid){id.pauseVideo();}}); break;case “dm”: ids.forEach(function (id){if (id !=vid && !id.paused){id.pause();}}); break;}});}var ytOnLoadFn=[];function onYouTubePlayerAPIReady(){ytOnLoadFn.forEach(function(name){window[name]();});}function onYTEmbedLoad(ytp){embedId.yt.push(ytp);ytp.addEventListener(“onStateChange”, function(event){if(event.data === YT.PlayerState.PLAYING)pauseVideos(ytp);});}function pause(){pauseVideos()}function ytPK7EWmqeGm4(){var p = new YT.Player(“div_PK7EWmqeGm4”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “PK7EWmqeGm4”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytPK7EWmqeGm4”);

பி.கு.: மேல் மாவு மீதம் இருந்தால் சிறுது கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, உப்பு சேர்த்து கார வடையாக செய்யலாம்.

ஆட்டி சுட்ட முறுக்கு:

இது வரை பலகாரமே செய்யாதவரும் மிக எளிமையாக பயம் இல்லாமல் இந்த முறுக்கு செய்து பார்க்கலாம். எண்ணெயும் குடிக்காமல் வரும்.

வாருங்கள்.. மிக எளிமையான , மிகவும் ருசியான முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 2 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்

வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி

ஓமம் – 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் – 4 தேக்கரண்டி

ஆயத்த வேலைகள் :

இட்லி அரிசியை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற விடவும்.

உளுத்தம் பருப்பை ஒரு கடாயில் போட்டு , மெல்லிய தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

ஊற வைத்த அரிசியை தண்ணீர் குறைவாக தெளித்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ அரைக்கலாம். எதுவாயினும் தண்ணீர் மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.

வறுத்த உளுத்தம் பருப்பை மிக்சியில் நன்றாக , திப்பி இல்லாமல் மென்மையாக பொடித்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பு மென்மையாக பொடிக்க வேண்டியது அவசியம். வேண்டுமானால் சல்லடையில் சலித்துக் கொள்ளலாம்.

அரைத்த அரிசி மாவில் பொடித்த உளுத்தம் பருப்பு, எள்ளு, ஓமம், உப்பு, வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசையவும். வெண்ணெய்க்கு பதிலாக அதே அளவு சூடான எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் சேர்ப்பதால் முறுக்கு எண்ணெய் குடிக்காமல் வரும்.

எள்ளு வாசத்திற்காகவும், ஓமம் செரிமான சக்திக்காகவும் சேர்க்கிறோம்.

பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தால் சுவையான முறுக்கு ரெடி..

இந்த தீபாவளிக்கு இந்த முறுக்கு செய்து பாருங்கள்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இந்த முறுக்கு செய்முறையை கீழ் காணும் வீடியோவிலும்காணலாம்.

function ytIPqPEGmREOk(){var p = new YT.Player(“div_IPqPEGmREOk”, {height: document.body.offsetWidth * (9/16),width: document.body.offsetWidth,videoId: “IPqPEGmREOk”}); onYTEmbedLoad(p)} ytOnLoadFn.push(“ytIPqPEGmREOk”);

மேலும் பலஉணவிற்குwww.busyatindiankitchen.blogspot.com லிங்கில் காணலாம்

By – Vinothini Vanniarajan

Leave a Reply