நாம் தினம் தினம் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலும் அரிசி தான். ஆனால் அதன் அருமை நமக்கு ஒருநாளும் தெரிவதில்லை, நம் பிள்ளைகளுக்கும் உணவின் பெருமையை சொல்லி வளர்பதில்லை.

நம் பெற்றோர்கள் தட்டில் சாதம் வைக்கும் பொழுதே சொல்லி விடுவார்கள் தட்டுலையும் தரையுலையும் “ஒரு பருக்க சோறு ” கூடஇருக்க கூடாதுன்னு.

நாம் நம் பிள்ளைகளுக்கு இதைச் சொல்கிறோமா? வீட்டில் சாப்பிடும் பொழுது பிடிக்கவில்லை, மீதம் ஆகி விட்டால் குப்பைத் தொட்டியில் கொட்டி விடுகிறார்கள், பள்ளியிலும் வேஸ்ட் பண்ணிட்றங்க. இதனை ஆரம்பித்தில் நாம் சரி பண்ணவில்லை என்றால் அவர்களுக்கு கடைசி வரையில் உணவின் அருமை தெரியாது. விவசாயிகளின் உழைப்பும் புரியாது.

ஒரு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தன் மகள் காய்கறி பிடிக்கவில்லை என்று குப்பைத் தொட்டியில் போட்டு விட்டாலாம் அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா! குப்பைத் தொட்டியில் இருந்த காய்கறிகளை எடுத்து கழுவி அதனை அவர் மகள் முன்னாடியே தட்டில் வைத்து சாப்பிட்டாராம். இதனை பார்த்து கொண்டு இருந்த மகளுக்கு தன் தவறு உணர்ந்தது.

நான் இந்த கட்டுரையில் அரிசியை மட்டுமே கூறிப்பிடவில்லை வீட்டில் தேவையில்லை என்று நினைக்கும் பொருட்களை உபயோகமாக மாற்றுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.

மேலே கூறியவை எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும்.மீதமான உணவு நன்றாக இருந்தால். தெரு ஓரங்களில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் இருப்பவர்களுக்கு கொண்டு போய் கொடுங்கள். உங்கள் பரம்பரைக்கே உணவு பஞ்சம் வராது.

தினமும் உணவும், காய்கறிகள், மின்சாரம், தண்ணீர் உபயோகிப்பவர்கள் பெண்களாகிய நாம் தான் இதனை மறுசுழற்சி செய்யவும், வீணாக்காமல் இருக்கவும்,சேமிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

உழவன் சேற்றில் கால் வைக்க யோசித்தால் நமக்கு ஒரு பிடி சோறு கூட மீஞ்சாது.

இதனை பசுமரத்தாணி போல் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

இது உங்கள் கடமைகளில் ஒன்றாக எடுத்து கொள்ளுங்கள் தோழிகளே.

நம் நாட்டில் உள்ள பஞ்சத்தை போக்க நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்யுங்கள்.

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்…..

By – Nanthini Palani

Leave a Reply