உலக வெப்பமயமாதல் என்பது 90ல் ஒரு பாடமாய் இருந்தது.நாளைடைவில் ஆர்டிக், அண்டார்க்டிக்கில் பனி சரிவு,சுனாமி,பூகம்பம்,வெள்ளம் போன்ற பேரிடர் மூலமாக இயற்கை அன்னை நமக்கு விடுத்த பல எச்சரிக்கைகளுக்கு பின் நாம் சுற்றுசூழலை காக்கும் பொருட்டு மூன்று R(Reduce, Reuse Recycle) விதியை பின்பற்ற முற்படுகிறோம்.

பிளாஸ்டிக் முற்றிலுமாக தவிர்க்க இயலாத பல துறைகள் உள்ளது அதில் ஒன்று பொம்மைகள் உற்பத்தி செய்யும் தொழில்.பொம்மை என்பது குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு அல்ல.பிள்ளைகளின் பகுப்பாய்வு திறன்(analytics) மற்றும் அறிவாற்றல் (intellectual) திறன்களை வளர்க்கும் ஒரு கருவியாய் விளங்குவது பொம்மை. தற்போது கடைகளில் கிடைக்கும் விளையாட்டு சமயங்களில் 90 % பொருட்கள் பிளாஸ்டிகினால் ஆனவை மேலும் அவற்றை மறுசுழற்சி செய்யவது கடினம் அதே சமயம் அவற்றின் ஆயுள் பெற்றோர்களான நாம் மற்றும் நம் பிள்ளைகளை விட மிகப்பெரியது .

சாதாரணமாக ஒரு குழந்தை சுமார் ஐந்து வயதோ அல்லது ஆறு வயது வரையிலோ பொம்மைகளை வைத்து விளையாடும் அதே சமயத்தில் அவர்களின் தேவைக்கேற்றார் போல் நாம் அதனை மாற்றவோ அல்லது புதிதாக கடைகளில் இருந்து வாங்க வேண்டும். பிள்ளைகளுக்கு நாம் வாங்கித்தருவதோடு மட்டுமல்லாமல் பரிசாக வரும் பொருட்க்களும் பல.புது வரவினால் பழைய பொம்மைகளின் நிலைமை என்ன? ஒரு வீட்டில் நூற்றுக்கணக்கில் பிளாஸ்டிக் பொம்மைகள் இருந்தால் அவர்கள் புழங்கும் அனைத்து இடத்திலும் இருக்கும் பொம்மைகளை கணக்கிட்டு பார்த்தால் அவற்றின் அளவு எவ்வளவு இருக்கும்?

சஸ்டைனபில் டாய்ஸ்

இதற்காக பிள்ளைகளுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்களும் வாங்கமுடியாமல் இருக்க முடியாது.சற்று சுற்று சூழலை மாசு படுத்தாத பொருட்கள் எவையேனும் உள்ளதா என்று சற்று ஆராய்ந்து பார்த்தால்

சந்தைகளில் கிடைக்கிறதா என்றால் மரத்தினால் ஆன சென்னப்பட்டனா பொம்மைகளை தவிர வேறெதுவும் இல்லை. அண்மையில் பேப்பர் மேச் வைத்து செய்யப்பட்ட 3 -டி டாய்ஸ்களை அறிமுக படுத்தும் பொருட்டு சென்ற வாரம் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் அறிமுக நிகழ்ச்சி நடந்தேறியது.க்ராப்ட்டூன்ஸ் என்றழைக்கப்டும் இவை மறுசுழற்சி செய்யப்பட்ட காகித கூழினால் ஆனவை.

ரஷ்யாவின் ஷார் பாபியர் என்ற நிறுவனம் பேப்பர் மேச் விளையாட்டு பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களின் உதவியோடு செய்யப்படுகிறது இந்த பொருட்கள். க்ராப்ட்டூன்ஸ் நிறுவனம் தனது பொருட்களை 2011ல் ஷார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கண்காட்சியில் முதன் முறையாக தனது பொருட்களை அ அறிமுகப்படுத்தியது.

பிரியா( க்ராப்ட்டூன்ஸ் சென்னை அஸோஸியேட்) அவர்கள் க்ராப்ட்டூன்ஸ் பற்றி கூறுகையில், நாங்கள் அறிமுக இந்த 3 -டி டாய்ஸ்கள் தற்போது சில்லறை விற்பனை செய்யப்படுவதில்லை பள்ளியில் கிராப்ட் டீச்சர் உதவியுடனும் ,ஆஃடர் ஸ்கூல் ஆக்ட்டிவிடிஸ் ப்ரோக்ராம் மூலம் குழந்தைகளிடையே கொண்டு செல்கிறோம் ஏனெனில் இதனை பயன் படுத்தும் விதத்தை பற்றி எவரேனும் வழிகாட்டினால் தான் அவர்கள் இந்த பொருட்கள் மூலம் தன் கற்பனை திறமையை காட்ட இயலும். நான்கு வயது முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இவைகளின் விலை சுமார் 30 முதல் 150 ருபாய் மட்டுமே.

ரிட்டன் கிப்ட்சாக குடுக்க விருப்பமுள்ளவர்கள் எங்கள் இணையதளம் (https://www.kraftoons.com/) அல்லது முகப்புத்தகம் (https://www.facebook.com/kraftoons) வாயிலாக இதனை ஆர்டர் செய்யலாம். அலைபேசி மற்றும் தொலைக்காட்சியிலிருந்து க்ராப்ட்யூன்ஸ் குழந்தைகளை திசை திருப்ப ஓரு புதிய முயற்சி யை மேற்கொண்டுள்ள அந்நிறுவனித்திற்கு வாழ்த்துக்கள். பண்டிகை காலம் நெருங்கிவிட்டது குழந்தைகளுக்கு இத்தைகைய ஈக்கோ பிரன்டிலி பரிசு மூலம் சுற்றுசூழல் மாசு பற்றிய விழிப்புணர்வோடு சேர்ந்து கற்பனையும் வளர உதவுவோம்.

join group

Leave a Reply