Categories: சமையல்

எள்+நெய்

வணக்கம் தோழிகளே, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகளை தொடர்ந்து வாசித்து உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இவ்வாண்டின் முதல் (எனது) பதிவு இதோ உங்களுக்காக..

நமது அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிகவும் முக்கியமான உணவு பொருள் எண்ணெய்.
இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.

எண்ணெயை நாம் அன்றாடம் பொரிக்க, தாளிக்க பயன்படுத்துகிறோம். அப்படி நாம் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்தும் போது, பல சமயங்களில் எண்ணெய் வீணாகிப் போகிறது. இதை தவிர்க்க இதோ சில டிப்ஸ்

1. முன்கூட்டியே மாவு மற்றும் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பொரிக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களின் அதிகப்படியான ஈரத்தை உலர்த்திட வேண்டும். ஈரமாக இருந்தால் எண்ணெய்முறிந்து சலசலவென சத்தம் கேட்கும். மேலும் உணவுப் பொருட்கள் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

3. ஒரே சீரான முறையில் பொறிக்கப்பட வேண்டுமானால், பொறிக்கப்பட வேண்டிய காய்கறிகளை ஒரே சீரான அளவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் உணவுப் பொருட்கள் சுலபமாக வெந்து விடும்.

4. அதிக வெப்பம் தாங்கும் எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

5. தேவைக்கு அதிகமாக எண்ணையை சூடேற்றினால், அது உணவுப்பொருட்களை கருக செய்வதோடு மட்டுமில்லாமல் எண்ணெயின் தரத்தையும் கெடுத்துவிடும்.

6. எண்ணெய் தேவையான வெப்ப நிலையை அடைந்தவுடன், அதே சீரான வெப்ப நிலையில் நாம் உணவு பொருட்களை வறுக்க வேண்டும்.

7. வறுக்க பயன்படுத்தும் பாத்திரத்தில் அதிக அளவு உணவு பொருட்களை நிரப்பாமல் அந்த பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப உணவுகளை நிரப்பி வைக்க வேண்டும்.

8. உணவுப் பொருட்களை வறுக்கும் போது எண்ணெய் தீர்ந்து விடும் பட்சத்தில், தேவையான அளவு எண்ணெயை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் எண்ணெயின் பயன்பாடு சீரான நிலையில் இருக்கும்.

9. எந்த உணவு பொருளும் வறுக்காத நிலையில் எண்ணெயை அதிக சூடாக வைத்திருந்தால் உணவுப் பொருள் கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே அதிக சூடான எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

10. எண்ணெயில் மிதக்கும் சிறு துகள்களை(உணவு துணுக்குகளை) எடுத்து விடவும், ஏனென்றால் இவை மீண்டும் மீண்டும் எண்ணெயில் மிதக்கும் போது கருகி உணவை கெடுத்துவிடும்.

11. உணவை பொரித்து முடிக்கும் போது அடுப்பை அணைத்து விடவும், இதனால் எண்ணெய் முறிவது தடுக்கப்படும்.

12. எந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும், ஒரு முறை பயன்படுத்திய அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்த வேண்டாம். அதில்தான் ஆரோக்கியக் கேடு இருக்கிறது.

13. குறைந்த புகை எண் கொண்ட (Low smoke point) செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடப் பயன்படுத்துங்கள்.

எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ, அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம், இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

By – Priya Ashok

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago