விஷாலின் கழுத்தை திருவிப்போட்ட தனுஷ்: பழைய கோபத்தில் புறாவுக்கு ஆப்படிக்க துடிக்கும் சேவல்!

கோலிவுட்…! இல்லை இல்லை அதையும் தாண்டி, தென்னிந்தியாவின் மற்ற மாநில சினிமா துறையினரும் கூர்ந்து கவனிப்பது தனுஷ் – விஷால் சண்டையைத்தான். அதிலும் தனுஷின் மேனேஜர் விஷாலுக்கு எதிராக வெளியிட்ட ஆடியோ மெசேஜை தொடர்ந்து சண்டை உச்சத்தை தொட்டுள்ளதுதான் ஷாக். சிக்கல் இதுதான்…

கமர்ஸியல் ஹிட்டடித்த தனுஷின் மாரி படத்தின் சீக்வெலான ‘மாரி 2’ ரிலீஸுக்கு தயார். டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸ் செய்துகொள்கிறோம், அனுமதிவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கடிதம் கொடுத்தாராம் தனுஷ். கொடுத்து பல வாரங்களாகியும் ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையாம்.

தனுஷ் கம்பெனியின் முக்கிய நிர்வாகியான வினோத் என்பவர் விஷாலுக்கு போன் மேல் போன் போட்டிருக்கிறார்.
அதற்கும் நோ ரெஸ்பான்ஸ். டென்ஷனானவர் தனுஷிடம் ‘சார் இவங்க ஓவரா பண்றாங்க. அதுவும் பிளான் பண்ணி உங்களை டிஸ்டர்ப் பண்றாங்க.’ என்று பொரிந்திருக்கிறார். கொஞ்சம் யோசித்த தனுஷ் கண்ணை சிமிட்ட, வினோத்தோ விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளை நோக்கி பேசி ஒரு ஆடியோவை வெளியிட்டார். அது சினிமா வட்டாரத்தில் வைரலானது. அந்த ஆடியோவில், ‘அனுமதி கடிதத்துக்கு பதிலில்லை. பல முறை முயன்றும் சங்கத்தின் மேனேஜர் தினேஷ் கூட போனை எடுப்பதில்லை. பல கோடிகள் கொடுத்து மாரி -2 வை உருவாக்கியுள்ளோம். எங்களுக்கும் பண சிக்கல் இருக்கிறது. அதனால் கண்டிப்பாக படம் டிசம்பர் 21-ல் ரிலீஸாகும் முடிந்தால் தடுங்கள்.’ என்று அதில் சதாய்ப்பாக பேசியிருந்திருக்கிறார்.

தனுஷின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து விஷால் உச்ச கோபத்துக்கு போய்விட்டாராம். தனுஷுக்கு எப்படி செக் வைப்பது? என்று தடாலடியாய் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஷால் – தனுஷ் மோதலின் பின்னணி என்ன? என்று விசாரித்தபோது “அதாவது தனுஷின் வட சென்னை படமும், விஷாலின் சண்டக்கோழி -2 படமும் ஒரே நாளில் ரிலீஸானது. இதில் வடசென்னை ஹிட் ஆனால் பெரிதாக எதிர்பார்க்கபட்ட சண்டக்கோழியோ மரண மாஸ் லாஸ்!” இதுதான் பிரச்னையாம். விஷால் படம் தோற்றதற்கு தனுஷ் எப்படி பொறுப்பாவாராம்?…

அதாவது ரிலீஸுக்கு முன்னரேயே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது வடசென்னை. அது தனுஷின் சொந்த தயாரிப்பு. அதேபோல் விஷாலின் சொந்த தயாரிப்புதான் சண்டக்கோழி 2. என்னதான் லிங்குசாமி இயக்கம், ஹிட்டடித்த சண்டக்கோடியின் செகண்ட் பார்ட் என்றாலுமே கூட இந்தப் படம் பற்றி பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ‘என் படம் ரிலீஸாகி ஓரளவு வசூல் ஆன பிறகு நீங்க இறங்குங்களேன்’ என்று தனுஷிடம் கேட்டிருந்தாராம் விஷால். ஆனால் தனுஷ் அதை கண்டுகொள்ளாமல் திட்டமிட்டபடி வடசென்னையை களமிறக்கிவிட்டார்.

வடசென்னை கமர்ஷியல் மற்றும் கலா ரசிகர்களை திருப்தி படுத்த, சண்டக்கோழியோ படுத்துவிட்டது. ஆக தன் படமான சண்டக்கோழியின் கழுத்தை வேண்டுமென்றே திருவிப்போட்டுவிட்டார் என்று தனுஷ் மீது கடும் கடுப்பிலிருந்திருக்கிறார் விஷால். இதற்கு பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்தான் இப்போது மாரி -2 விஷயத்தில் விளையாடுகிறார் என்கிறார்கள்.

ஆனால் தனுஷின் பிளான் படி தடையை மீறி மாரி -2 ஒருவேளை வந்துவிடும். ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்! ஆனால் இதில் விஷாலின் திட்டம் எப்படி நிறைவேறும்? என்கிறீர்களா!….படம் ரிலீஸாகும் வரையிலும், அதன் பின்னரும் கூட கடும் மன சஞ்சலத்தில் தனுஷ் நோவார். அதுமட்டுமில்லாமல் இப்படி சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி படத்தை வெளியிட்டதற்காக அவருக்கு ரெட்கார்டையும் விஷால் போடலாமே!…அந்த கணக்குதான். ஆக சினிமாவுல இந்த ஹீரோக்கள் வில்லன்களோட மோதுறதைவிட, நிஜமாக தொழில்ல இவங்களுக்குள்ளே மோதிக்கிறதுதான் பெரிய அடிதடியா இருக்குது போங்க.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

1 hour ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

1 hour ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

1 hour ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

1 hour ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

1 hour ago