மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புண்டு என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வரும் 13- ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் இலங்கை போன்ற பெருங்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சீர்காழியில் அதிகபட்சமாக மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

Leave a Reply