Categories: சினிமா

‘விஜய்யிடம் பேசிவிட்டேன்… இனி போராட்டம் நடக்காது’ – அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி

Sarkar Movie Controversy : சர்கார் படத்தில் தமிழக அரசு பற்றிய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக கூறி அப்படத்திற்கு எதிராக அதிமுகவினம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். பல சென்னை, மதுரை, கோவை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்படத்தின் பேனர்கள், கட் அவுட்கள் கிழித்து எறியப்பட்டன. இந்நிலையில், படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு இன்று மதியம் இரண்டு மணி முதல் படம் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேசமயம், வரும் 27ம் தேதி வரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சர்கார் படம் ரிலீஸானது.
இப்படத்தில், ஓட்டு உரிமை பரிக்கப்படும் ஆவேசத்தில் தனது அடிப்படை உரிமையை மீட்க தேர்தல் களத்தில் இறங்குகிறார் நடிகர் விஜய்.

Sarkar Movie Controversy LIVE UPDATES : சர்கார் படத்துக்கு எதிராக அதிமுக போராட்டம்

இப்படியாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கதையில், மறைந்த ஜெயலலிதா ஆட்சி புரிந்த காலத்தில் அளிக்கப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தும், தமிழக அரசு குறித்தும் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியது. எனவே அந்த காட்சிகளை அமைத்த இயக்குநர், படக்குழுவினர் மற்றும் சர்கார் படத்தையே கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது குறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே,

05: 30 PM : “சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்” என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

05:15 PM : அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல திரைப்படங்கள் அரசை விமர்சித்து வந்திருக்கின்றன; அவற்றை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன். பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டது. தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

05:00 PM : ரசிகரின் கமெண்ட்டும், நடிகர் சிபி சத்யராஜின் பதிலும்,

04:50 PM : படைப்பின் சுதந்திரத்தை கெடுக்காதீர்கள் என்று சர்கார் படத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.

04:40 PM : ஆயிரம் கைகள் மறைத்தலும் ஆதவன் மறைவதில்லை – நடிகர் பிரசன்னா

“மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்தலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வுசெய்வர்” என்று நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

04:30 PM : “நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம்”

ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் ‘நீக்க வேண்டும்’ என்று அவர்கள் கேட்கும் காட்சிக்குப் பின் உடனே வரும் வரிகள் “நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம்” என்று அப்படத்தின் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

04:20 PM : சர்கார் படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் இன்று மாலை அவர் அலுவலகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களை சந்திப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இது முற்றிலும் தவறான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:00 PM : சர்கார் படத்தை பொறுத்தவரை நல்ல கருத்துகள் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்; கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை மூலமாகவோ சட்டரீதியாகவோ தீர்க்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

03:45 PM : சர்கார் பட போஸ்டரை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் மீது எத்தனை வழக்கு போடப்பட்டு உள்ளது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

03:30 PM : இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க – சர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை

03:10 PM : சர்கார் படத்தில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது?

சர்காரில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கம். வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லி என்ற ஆடியோ மியூட் செய்யப்பட்டுள்ளது

02:45 PM : படைப்பாளியை அன்பினால் கனியவைப்பார் ஜெயலலிதா – ஆர்.கே.செல்வமணி

சர்கார் விவகாரம் குறித்து FEFSI அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “திரைப்பட பேனர்களை கிழிப்பதும், திரையரங்கில் சட்ட ஒழுங்கை குலைப்பதும் ஏற்புடைய செயல் அல்ல. படக்குழு சில காட்சிகளை நீக்கியதால், இந்தப் பிரச்னையை கைவிட வேண்டும். ‘படைப்பாளியை அன்பினால் கனியவைப்பார் ஜெயலலிதா. அப்படியொரு வழியைத் தான் ஆளும் அதிமுக அரசும் கடைப்பிடிக்க வேண்டும். படைப்பாளிகள் தனிமனித தாக்குதலோ, காழ்ப்புணர்ச்சியோ இன்றி படத்தை இயக்க வேண்டும்” உள்பட நீண்ட அறிக்கையை FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ளார்.

02:30 PM :

02:20 PM : சர்கார் காட்சி நீக்கத்திற்கு பிறகு ரசிகர்களின் ரியாக்ஷன்

02:10 PM : தேசிய அளவில் பேசப்படும் சர்கார்

சர்கார் ஹேஷ்டேக் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1,85,000 என்ற அளவில் இருந்து ட்வீட்கள் இப்போது, 3.75 லட்சத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், நாடு முழுவதும் சமூக தளங்களில் பேசும் பொருளாகி இருக்கிறது சர்கார்.

மேலும் படிக்க – வேதனையில் சாதனைகள் தொடரும் : அடி மேல் அடி மீண்டு(ம்) எழுந்த விஜய்!

02:00 PM : அதிமுக கோழைகளுக்கு இடம் கொடுத்தாச்சு – குஷ்பூ

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ கூறுகையில், “சர்கார் படத்தின் காட்சிகளை நீக்கினாலோ, வசனங்களுக்கு மியூட் போட்டாலோ, பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை. தனது குண்டாயிஸத்தை மேலும் றெக்கை கட்டி பறக்க வைக்க, அதிமுக கோழைகளுக்கு இந்த சம்பவம் மேலும் இடம் அளித்துவிட்டது. படிக்காத முட்டாள்கள் மாநிலத்தை ஆள்வதை இந்த உலகம் வேடிக்கை பார்க்க நாம் அனுமதித்திருக்கிறோம்” என்று விளாசியுள்ளார்.

01: 45 PM – ‘மறுதணிக்கை செய்த சர்கார் திரைப்படம் பிற்பகல் 2 மணிக்கு திரையிடப்படும்’ என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

01:30 PM – ‘சர்கார்’ பட பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். “சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பட பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது” என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – சர்கார் படத்துக்கு ஆதரவாக களமிறங்கிய சினிமா பிரபலங்கள். ஷார்ட் லிஸ்ட்

12:00 PM : நடிகர் விஜய்யின் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.

11:40 AM : இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டரில், “சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!” என குறிப்பிட்டுள்ளார்.

11:30 AM: சர்கார் படத்தில் சர்ச்சைக்குரியதாக கூறப்படும் காட்சிகளை நீக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

11:20 AM: முதல்வர் பழனிசாமியை சந்திக்க, நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:10 AM: சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:00 AM : தஞ்சையில் ஜூபிடர், சாந்தி தியேட்டரில் சர்கார் படத்தின் பகல் காட்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் முடிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:30 AM : சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்செய்யும் பணி காலை 10:30 மணியளவில் தொடங்கி, மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் பேட்டியளித்துள்ளார்.

10:15 AM : சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக தஞ்சை – 25 பேர், திருவாரூர் – 24 பேர், நாகை – 20 பேர், கரூர் – 10, திருச்சி – 4 பேர், புதுக்கோட்டை – 4 பேர் என மொத்தம் 87 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

10:00 AM : சர்கார் படத்தில் இருக்கும் சர்ச்சை காட்சிகளை உடனே அகற்ற வேண்டும் என்று அதிமுகவினர் நடத்தும் போராட்டத்தால் தியேட்டர்களில் நேற்று இரவு முதல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் தியேட்டர்கள் கலையிழந்து காணப்படுகிறது.

9.45 AM : நேற்று இரவு முதல் சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் சர்கார் படத்தை கண்டித்து தியேட்டர்கள் முன்பு குவிந்த அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் கட் அவுட்கள் அனைத்தையும் கிழித்தனர்.

9:30 AM : சர்கார் படத்தில் வரும் சர்ச்சை காட்சிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இந்த காட்சிகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

7 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

7 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

7 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

7 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

7 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

7 hours ago