சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இளைய தளபதி விஜய் முதல்வரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு சர்ச்சை முடிவுக்கு வந்தது என்று கூறியுள்ளார் மறு தணிக்கை செய்து படத்தை வெளியிடுவதாக தயாரிப்புக்குழு உறுதி அளித்துள்ளது என்று கூறினார்.

இனி வரும் காட்சிகள் அனைத்திலும் கோமளவள்ளி என்ற பெயரை மியூட் செய்து மற்றும் இலவச பொருட்களை எரிக்கும் காட்சியை விலக்கிக் கொள்ளப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் டி.டி.வி.தினகரன் அவர்கள் கோமளவல்லி என்ற பெயர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தொடர்ந்து இனி சர்கார் படம் தடையில்லாமல் ஓடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி மகிழ்கின்றனர் ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகள் அரசியல் உள்நோக்கத்துக்காகவே என்று சினிமா வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

பழ.கருப்பையா இளைய தளபதியை பெருமைப்படுத்தும் விதமாக கூறுவது என்னவென்றால் நான் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகி இருக்கேன் ஆனால் இதுபோன்ற ஒரு மக்கள் சிந்தனை உள்ள மனிதரை நான் பார்த்ததில்லை என்றும். தளபதி தன்னிடம் கூறியது என்னவென்றால் நான் நிறைய சம்பாதித்து விட்டேன் என்னை நம்பி இருக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற கூறியுள்ளார். தளபதி கண்டிப்பாக முதலமைச்சர் ஆவார் ஆனால் இப்பொழுது இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply