Categories: சினிமா

கோமளவல்லி சர்ச்சையை கிளப்பியது சர்கார் அல்ல: இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்

Komalavalli – Sarkar Controversy: கோமளவல்லி சர்ச்சை காரணமாக சர்கார் படம் சிக்கலை எதிர்கொண்டது. இந்தச் சர்ச்சை புதிதல்ல. 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சர்ச்சையைப் பற்ற வைத்தவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

கோமளவல்லி என்கிற பெயர் மறுபடியும் ‘லைம்லைட்’டுக்கு வந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தில், வில்லியான வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் பெயர் கோமளவல்லி!

கதை உரிமை, தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் என சர்ச்சைகளுடன் வந்த சர்கார் படத்திற்கு, இந்த கோமளவல்லி என்கிற பெயரும் புதிதாக ‘புரமோஷன்’ கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Read More: யார் இந்த கோமளவள்ளி? ஜெயலலிதாவின் பெயர் தானா? போட்டிப்போட்டு கொண்டு தேடிய நெட்டிசன்கள்!

முதலில் இந்தப் படத்திற்கு எதிராக பிரச்னை கிளப்பிய செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘கோமளவல்லி’ விவகாரத்தை கிளப்பவில்லை. அதிமுக அரசின் இலவசத் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக பேட்டி கொடுத்தார் கடம்பூர் ராஜூ. அடுத்தடுத்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இதே கருத்தைக் கூறினர். ஆனால் அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் அதிமுக.வினர் ஆவேசமாக விஜய் பட பேனர்களை கிழித்தபோதுதான், இதில் வேறு ஏதோ சீரியஸான அம்சம் இருப்பது புரிந்தது.

ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல அதிமுக.வினரே தயங்கினர். காரணம், கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பது ஒரு தகவல்தான். ஜெயலலிதாவே ஒருபோதும் இதை உறுதிப்படுத்தவில்லை. எனவே வில்லிக்கு ஜெயலலிதா பெயரை வைத்திருப்பதாக எப்படி வெளிப்படையாக சொல்வது? என்பது அதிமுக அமைச்சர்களின் ஆரம்பகட்ட தயக்கம்!

கடைசியில் ஒருவழியாக தயக்கத்தை உடைத்து, ‘கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் இயற் பெயரா என்று தெரியாது. ஆனால் கருணாநிதி, இளங்கோவன் போன்றோர் அந்தப் பெயரை குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார்கள். அந்தப் பெயரை உள்நோக்கத்துடன் படக்குழு பயன்படுத்தியிருக்கிறது’ என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

Komalavalli – Sarkar Controversy: ஜெயலலிதா இயற்பெயரில் வரலட்சுமி?

Komalavalli And Sarkar Controversy: கோமளவல்லி சர்ச்சை எப்படி புயலாக அடித்தது என்பதை சற்றே நினைவு கூறலாம்.

இப்போது கோமளவல்லி என்கிற பெயரில், ‘கோமள’ என்கிற உச்சரிப்பை சென்சார் போர்ட் மூலமாக மியூட் செய்திருக்கிறது படக்குழு. இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிக்கும் கத்திரி போட்டிருக்கிறது. இதனால் சர்காரை சூழ்ந்த சிக்கல் உடைந்திருக்கிறது.

இதற்கிடையே 14 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயலலிதா ஆக்டிவாக இருந்தபோது இதே கோமளவல்லி சர்ச்சை எப்படி புயலாக அடித்தது என்பதை சற்றே நினைவு கூறலாம். 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஜெயித்திருந்தது. சோனியா காந்தி பிரதமர் ஆவார் என்பதே காங்கிரஸாரின் மொத்த எதிர்பார்ப்பு. சோனியாவும் அதற்கு தயாராகவே இருந்தார்.

அப்போதுதான் பாஜக, ‘வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் பிரதமராவது முறையல்ல’ என பிரச்னை கிளப்பியது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகும் பல ஆண்டுகள் சோனியா தனது இத்தாலி குடியுரிமையை விட்டுக் கொடுக்காததை தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் அம்சமாக பாஜக குறிப்பிட்டது.

காங்கிரஸ் கட்சியிலும் சரத்பவார், பி.ஏ.சங்மா ஆகியோர் சோனியா பிரதமர் பதவி ஏற்கக்கூடாது என வெளிப்படையாக குரல் கொடுத்தனர். அப்போது தெற்கேயிருந்து ஒரு குரல், சோனியாவுக்கு எதிராக வலுவாக கிளம்பியது. அது, ஜெயலலிதாவின் குரல்தான்!

மிக நீண்ட அறிக்கை ஒன்றை சோனியாவுக்கு எதிராக தயார் செய்த ஜெயலலிதா, ‘அன்றனியோ மொய்னோ’ என சோனியாவின் இயற்பெயரை அதில் பயன்படுத்தினார். சோனியா வெளிநாட்டுக் காரர் என்கிற வாதத்திற்கு இன்னும் வலு சேர்க்கிற விதமாக அந்த அறிக்கை அமைந்தது. சோனியாவை, பதி பக்தி இல்லாதவர் என்றும் ஜெயலலிதா விமர்சித்தார். பின்னர் பல்வேறு காலகட்டங்களில் அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பரிசீலனைகூட செய்யாததற்கும், திமுக.வுடன் பல நெருடல்கள் காங்கிரஸுக்கு உருவானபோதும் அந்தக் கூட்டணியை காங்கிரஸ் கைவிட விரும்பாததற்கும் அப்போது வெளியான ஜெயலலிதாவின் அறிக்கையே காரணம்!

அதேசமயம், ஜெயலலிதாவின் அந்த அறிக்கைக்கு அப்போதே வலிமையான முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து காரசாரமான பதில் அறிக்கை கொடுத்தார் ஒருவர்! அவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! ஜெயலலிதா குறித்து நீளமான அறிக்கை விட்ட இளங்கோவன் அதில், ‘கோமளவல்லி’ என்பதை ஜெயலலிதாவின் இயற்பெயராக கூறினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்களை வைக்க யாரும் துணியாத காலம் அது! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் ஜெயலலிதாவுடன் படித்தவர் என்ற அடிப்படையில் அவரது விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளங்கோவனுக்கு எதிராக அப்போது அதிமுக.வினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போது ஜெயலலிதாவோ, அதிமுக.வினரோ, கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் என ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் அதே கோமளவல்லி என்கிற பெயரை தற்போது வில்லி கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீக்கவும் வைத்துவிட்டனர்.

இப்படியொரு சர்ச்சை வரும் என தெரிந்தே மேற்படி பெயரை வைத்திருந்தால், ஏ.ஆர்.முருகதாஸ் புத்திசாலித்தனமான பிசினஸ்காரர்தான்!

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

6 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

6 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

6 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

6 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

6 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

6 hours ago