சர்கார் படத்தின் பிரச்சனை மிகப்பெரிதாக வெடித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். விஜய் படம் என்றாலே ஆளும் மத்திய கட்சி மற்றும் மாநில கட்சியினர் போர்க்கொடி தூக்குவது என்பது அனைவரும் அறிந்ததே. இன்று மாலை சென்னை உதயம் மற்றும் காசி தியேட்டர்களில் உள்ள சர்க்கார் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. இதில் பெரும் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சியினரை மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினரையும் விமர்சித்து இப்படத்தில் வரும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பல வசனங்களை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இது இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் விஜய் ரசிகர்கள் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர். முன்னர் சொன்னது போல் முறையான சான்றிதழ் பெற்ற பின்பு இதனை எதிர்ப்பது அரசியல் அராஜகம் என்று கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்கு போடப்பட வேண்டும் என்று சென்னை காவல் ஆய்வாளரிடம் தேவராஜ் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார் என்னவென்றால் ,மாநில அரசின் மீது வன்முறையைத் தூண்டுவதாக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் ஒரு அக்னிப் பரீட்சை தொடங்கிவிட்டது.

Leave a Reply