Categories: சினிமா

வாயில் கத்தியுடன் வந்த தனுஷ்… மிரட்டும் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என தனது மாறுபட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் அடுத்த பதிப்பாக உருவாகி வரும் வடசென்னைபடத்தை ஒட்டுமொத்த தமிஹ் சினிமாவே கவனித்து வருகிறது. அப்படியென்ன அதில் ஸ்பெஷல்? ஆமாம் ஸ்பெஷல் இருக்கு இந்த படம் மூன்று பாகங்களாக தயாராகிறது இந்தன் முதல் பாகம் வரும் ஜூன் மாதமே வருகிறது.

இப்படம் ’விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கம் இப்படம் தலைப்பிற்கேற்ப வட சென்னை மக்களின் வாழ்வியலை தனுஷின் கதாபாத்திரம் வழி விவரிக்க உள்ளார்.

படம் குறித்து வெற்றிமாறன் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தனுஷ் அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
கேரம் பிளேயரான அன்பு, நேஷனல் லெவலில் கேரம் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறார். உலக அளவில் சாம்பியன் ஆக வேண்டும் என்பதும் அன்புவோட கனவு! இப்படி ஒரு கனவோட இருக்கிற அன்பு கேரக்டருக்கு என்ன நடந்தது என்பதுதான் படம். வட சென்னை மக்களோட வாழ்வியல்தான் களம். இங்கு வாழ்கிற மக்களின் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள்? போராடுவாங்க! அந்தப் போராட்டமும் அவங்களோட வாழ்க்கையும்தான் மொத்த படமும்” என்று கூறியுள்ளார்.

மூன்று பாகங்களாக உருவாக உள்ள நிலையில் முதல்பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

2 hours ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

2 hours ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

2 hours ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

2 hours ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

2 hours ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

2 hours ago