“எடப்பாடிக்குதான் குருவாயூரப்பன் அருள் இருக்கிறது” – இயக்குநர் பாக்யராஜ்

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

‘கிரிஷ்ணம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குநர் பாக்யராஜ் பேசினார். அப்போது அவர்,”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது” என்று குறிப்பிட்டு பேசியது பலரது கவனத்தை ஈர்க்கும்படி இருந்தது.

மேலும் அவர் பேசும்போது, “நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்ட போது என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார்.
அவரோ எனக்கு சினிமாவே சரிப்பட்டு வராது. இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார். நான் சினிமாதான் என்று பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட்,டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

எங்களுக்கு ஒரு ஒர்க் ஷாப் இருந்தது. அதில் என்னை வேலை செய்ய வைக்க முயற்சி நடந்தது. இது என் அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ என்று பிறகு நான் நினைத்தேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட ‘கிரிஷ்ணம்’ குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம்”என்றார்.

மேலும் அவர், “இங்கே பேசியவர் தனது மகனை பெரிய ஆபத்திலிருந்து குருவாயூரப்பன் காப்பாற்றியதாக சொன்னார். அதற்கு அவர் தன்னுடைய பக்திதான் காரணம் என்றும் சொன்னார். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் குருவாயூரப்பன் அருள் உள்ள ஒரே ஒருத்தர் எடப்பாடி பழனிசாமிதான். அவருக்குதான் குருவாயூரப்பன் அருள் அதிகமாக இருக்கிறது. யாருக்கு எப்போது அருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நானும் வேண்டி கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் நாம் வேண்டி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நினைத்தது நடக்க மாட்டேன் என்கிறது” என்றார்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

16 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

16 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

2 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

2 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

2 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

2 hours ago