Categories: சினிமா

“சும்மா உல்லூலாயிக்கு சொன்னேன்”.. விஜய் ரசிகர்களுக்கு பயந்து ஜகா வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: கனா வெற்றி விழாவில் தான் பேசியதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என டிவிட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வெளியான படம் கனா. சிவகார்த்திக்கேயனின் முதல் தயாரிப்பாக வெளிவந்த இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

நேற்று முன்தினம் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா” எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கனா படத்துடன் மாரி 2, அடங்கமறு உள்பட நாலைந்து படங்கள் வெளியாகின. இதில் அடங்கமறு படக்குழு சமீபத்தில் தான் வெற்றி விழா கொண்டாடியது. எனவே, அதனைத்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மறைமுகமாகத் தாக்கி பேசுகிறார் என்ற பேச்சு சமூகவலைதளங்களில் எழுந்தது.

ஆனால், ஐஸ்வர்யா சர்கார் படத்தைப் பற்றி தான் அப்படி சொன்னார் என சிலர் சமூகவலைதளங்களில் கொளுத்திப் போட்டனர். இப்படிக் கூறுபவர்கள் நிச்சயம் அஜித் ரசிகர்களாகத் தான் இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால், அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூகவலைதளங்களில் வார்த்தை சண்டை நடந்து வருகிறது.

இதைப் பார்த்து பயந்து போன ஐஸ்வர்யா ராஜேஷ், தனது பேச்சு குறித்து டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், “கனா வெற்றிவிழாவில் நான் சும்மா விளையாட்டுக்காகத் தான் அப்டி பேசினேன். எந்தப் படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலை.

நான் யாரையும் மனதார துன்புறுத்த மாட்டேன். எல்லாப் படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகனும்னு தான் நான் வேண்டிப்பேன். ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். அதை பெரிய வெற்றிப்படமாக மாற்றுவது அதைவிட எவ்வளவு கஷ்டமானது என்பதும் எனக்குத் தெரியும். என் பேச்சு யாருடைய மனதையாவது துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இந்தப் பிரச்சினையை விஜய்- அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவிற்கும் அவர்கள் பதில் அளித்து சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: oneindia

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago