Categories: சினிமா

மாஸா? தமாஸா? பேட்ட, விஸ்வாசத்திற்கு காத்திருக்கும் சவால்கள்!!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி இருக்கபோகிறது என்ற தீவிர எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் நாளை வெளியாக உள்ளது. ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. பேட்ட படத்த்தின் டிரைலர் கடந்த 28 ஆம் தேதி வெளியானது. அதில் ரஜினி பேசிய சில வசனங்கள் அஜித்தின் விஸ்வாசம் படத்தை தாக்கி பேசியதாக அஜித்தின் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதனையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி வந்தது விஸ்வாசம் டிரைலர். அதில் அஜித் பேசிய சில வசனங்கள் பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்குக் கௌண்ட்டராக அமைந்ததால் டிரைலர் வைரல் ஆனது. இதனால் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
சிவாஜிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் நன்றாக இருந்தது. ஆனாலும் அதில் ரஜினியின் வழக்கமான மாஸ் இல்லை. அதன்பின்னர் வெளியான கபாலி, காலா, 2.0 ஆகிய திரைப்படங்களில் ரஜினிக்கே உரித்தான மாஸ் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாந்து போய்விட்டனர். ஆனால் பேட்ட படத்தை பொறுத்தவரையில் படத்தின் டிரைலரே பக்கா மாஸாக இருந்தது. அந்த கால ரஜினியை பார்த்தது போல இருந்தது. அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் ரொம்ப சுமார் தான். ஆனால் விஸ்வாசம் படத்தின் டிரைலரையும், பஞ்ச் டைலாக்கையும் பார்த்தால், இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிப்பது போல தான் உள்ளது. பொங்கல் ரேசில் களமிறக்கப்பட்டுள்ள இவ்விரு படங்கள், ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை போக்கப்போகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago