Categories: சினிமா

வடிவேலு இல்லாமல் சமூக வலைதளங்கள் இல்லை: நியா நானா கோபிநாத் பேச்சு

சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், வடிவேலு இல்லாமல, அவரது காமெடி வார்த்தைகள் இல்லாமல் சமூக வலைதளங்களே இல்லை என்று தெரிவித்தார். சமூக வலைதளங்ளில் மீம்ஸ் போடுவது என்பது வடிவேலுவின் முகபாவனைகளை வைத்து பெரும்பாலும் இருக்கிறது. எந்த மீம்ஸ், அல்லது எந்த டிரோல் வீடியோவாக இருந்தாலும் அதில் வடிவேலு ரியாக்சன் நிச்சயம் இருக்கும். அந்த அளவுக்கு வடிவேலுதான் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வாழ்கிறார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நியா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், பேசுகையில், வடிவேலு இல்லாமல் சமூக வலைதளங்கள் இல்லை.
அவர் வெறும் காமெடி நடிகனில்லை. மிகப்பெரிய லெஜண்ட். வடிவேலு இப்போது நடிக்காமல் இருக்கலாம். நடிப்பது குறைந்திருக்கலாம். ஆனாலும் அவர் சொன்ன வசனங்களைக் கொண்டு இன்னும் ஒரு தலைமுறையைத்தாண்டியும் கூட சமூக வலைதளங்கள் பரபரப்புடன் இருக்கும். வடிவேலுவின் ‘ஆஹான்’ சொல்லாத விஷயமே இல்லை. வைச்சு செஞ்சிருவேன், வேற லெவல், சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு, நாங்கள்லாம் அப்பவே அப்படி… இப்படியாக வடிவேலுவின் வசனங்களை வைத்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ், மீம்ஸ் போட்டுக் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்றார்.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago