அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு விசாரணையை விமர்சித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த குற்றச்சாட்டை விசாரிக்கும், ராபர்ட் முல்லர் குழு விசாரணையை விமர்சித்த டிரம்பை அவரது கட்சியினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷ்யாவின் தலையீடே காரணம் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த எஃப்.பி.ஐ -ன் முன்னாள்…

ஜெர்மனி அதிபராக ஏஞ்சலா மீண்டும் தேர்வு

பெர்லின்: ஜெர்மனியின் புதிய அதிபராக, ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டார். ஐரோப்பிய நாடான ஜெர்மனியின், ஆளும் கன்சர்வேட்டிவ் கூட்டணி சார்பில், ஏஞ்சலா மெர்கல், அதிபராக பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த செப்டம்பரில், தேர்தல் நடந்தது.இதில், கிறிஸ்தவ ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், 33.2 சதவீத ஓட்டுகள்…

சுற்றுலா விசாவில் வேலை : 23 இந்தியர்கள் கைது

கொழும்பு: இலங்கையில், சுற்றுலா விசாவில் வந்து, பணிபுரிந்த, 23 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில், சுற்றுலா விசாவில் செல்பவர்கள், அங்கு பணிபுரிய அனுமதி இல்லை. நம் நாட்டில் இருந்து, அண்டை நாடான இலங்கைக்கு, சுற்றுலா விசாவில் சென்ற, 23 பேர், அங்கு பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து, அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில் இருந்து, இலங்கைக்கு…

பேரணியில் பேசிக் கொண்டிருந்த இம்ரான்கான்… பறந்து வந்து விழுந்த ஷூ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவராக உள்ளார். இவரது கட்சி சார்பில் பாகிஸ்தானின் பாஞ்சாப் மாநிலத்தில் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு இம்ரான்கான் பேசிக் கொண்டு இருந்த போது இவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. தன் கட்சி நடத்திய பேரணியில் இம்ரான்கான் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது…

அமெரிக்க அமைச்சர் அதிரடி நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து, ரெக்ஸ் டில்லர்சன் நீக்கப்பட்டுள்ளார். உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,யின் இயக்குனர், மைக் போம்பியோ, புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அரசில், வெளியுறவு அமைச்சராக இருந்தவர், ரெக்ஸ் டில்லர்சன். ஆப்ரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, பதவியில் இருந்து விலகும்படி, அதிபர் டிரம்ப், சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, பயணத்தை பாதியில் முடித்து,…

சிஐஏ., உளவு அமைப்புபின் முதல் பெண் தலைவர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுக்கு முதன் முறையாக பெண் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.ஏ.,வின் தலைவராக கினா ஹெஸ்பெல் என்பவரை நியமனம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது:Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do…

முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 153 ரன்கள் இலக்கு

கொழும்பு: முத்தரப்பு ‘டுவென்டி-20’ லீக் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி, 19 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 152 ரன்கள் எடுத்தது.இலங்கை தலைநகர் கொழும்புவில், இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. மழையால் தலா…

வாழ்நாள் அதிபர்… இனி ஜிஜிங்பிங் தான் சீனாவின் அதிபர்!

பீஜிங்: வாழ்நாள் முழுவதும் ஜி ஜிங்பிங் சீன அதிபராக இருக்கும் வகையில், அந்நாட்டில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி நிரந்தர அதிபராக அவர்தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஜி ஜிங்பிங் அதிபராக உள்ளார். இவர், இரண்டாவது முறையாக சீன அதிபராக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2023ல் இவரது ஆட்சி முடிவுக்கு…

அப்பா போல இருக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்

பார்ப்பதற்கு அப்பாவைப் போல் இருக்கும் குழந்தைகள் உடலநலத்தில் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும் என ஆய்வாளர்கள் கண்பிடித்துள்ளனர். பிறக்கும்போது உருவத்தில் தந்தையைப்போல இருக்கும் குழந்தை அவரின் பண்புகளையும் அவருடன் நேர்மறையான கருத்தையும் பெற்றிருக்கும் என நியூயார்க்கில் உள்ள பிங்கம்டன் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ளது. இந்த ஒற்றுமையால் தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதுடன் அதனால் குழந்தையின் முதல் பிறந்தநாளின்போது அந்தக் குழந்தை…

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய முகேஷ் அம்பானி..!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 33-வது இடத்திலிருந்து 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. ஒவ்வோரு வருடமும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 101 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் 19 பேர் புதிதாகவும்…