மெக்சிகோவில் வெடிபொருள் விற்பனை சந்தையில் வெடிவிபத்து: 27 பேர் பலியானதாக தகவல்

மெக்சிகோ: மெக்சிகோவில் உள்ள வெடிபொருள் விற்பனை சந்தையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. வெடிபொருட்களில் பிடித்த தீயால் வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்.ததாகவும் தகவல் வந்துள்ளது. TickTickNews

பாகிஸ்தானை விட்டு நான் வெளியேற முன்னாள் ராணுவத் தளபதி உதவினார்

சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தனக்கு உதவியதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரஃப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த “துனியா நியூஸ்’ என்ற செய்தித் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை இரவு ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முஷாரஃப் கூறியதாவது: நான் கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல…

ஜெர்மனி: கடைவீதிக்குள் லாரி புகுந்து 12 பேர் பலி: பயங்கரவாதத் தாக்குதல்?

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் கடைவீதிக்குள் லாரி புகுந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து லாரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொள்ளும் போலீஸார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் மக்கள் குழுமியிருந்த ஒரு கடைவீதிக்குள் லாரி தறிகெட்டு ஓடியதில் அங்கிருந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம்…

ரூ.5000 நோட்டுகளுக்குத் தடை: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

பாகிஸ்தானில் புழக்கத்தில் இருக்கும் ரூ.5000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.5000 நோட்டுகளுக்குத் தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் மேல் சபையில் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் உஸ்மான் சைஃபுல்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி கடும் எதிர்ப்புத்…

துருக்கியில் ரஷியத் தூதர் சுட்டுக்கொலை: புதின், டிரம்ப் கடும் கண்டனம்

துருக்கி தலைநகர் அங்காராவில் ரஷிய தூதர் ஆண்ட்ரீ கார்லோவ் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை சீலிட்டு பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அந்நாட்டு போலீஸார். துருக்கியில் ரஷியத் தூதர் ஆண்ட்ரீ கார்லோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துருக்கி தலைநகர்…

அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான “தேர்வு செய்வோர் அவை’ மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர்…

ஜெர்மனி சந்தையில் லாரி ஏறி 12 பேர் பலியான சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

பெர்லின்: ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொதுமக்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் அகதியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த விபத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். TickTickNews

ஆப்கனில் அண்டை நாட்டால் தூண்டிவிடப்படும் பயங்கரவாத பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு அதன் அண்டை நாடு (பாகிஸ்தான்) ஆதரவு அளித்து தூண்டிவிடும் பிரச்னைக்கு சர்வதேச அமைப்பு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலை தொடர்பாக விவாதிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை…

இலங்கை அதிபர் சிறிசேனா ஜனவரி 26ம் தேதிக்குள் கொலை செய்யப்படுவார் : ராஜீவை தாக்க முயன்ற மாஜீ வீரர் ஆருடம்

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அடுத்த மாதம் 26ம் தேதிக்குள் கொல்லப்படுவார் என ராஜீவ் காந்தி மீது துப்பாக்கியால் தாக்க முயன்ற முன்னாள் வீரர் விஜஜிதா ரோகனா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு அமைதிப்படை அனுப்புவதற்கான இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1987ம் ஆண்டு இலங்கை…

துருக்கியில் பயங்கரம் : போலீஸ்காரரால் ரஷ்ய தூதர் மேடையில் சுட்டுக்கொலை

அங்காரா: துருக்கியில் புகைப்பட கண்காட்சியில் அந்நாட்டுக்கான ரஷ்ய தூதரை பணியில் இல்லாத போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த சம்பவத்தில் கொலைக்காரனை இயக்கியது யார் என்று உடனே தெரிய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அரசுக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார். துருக்கிக்கான ரஷ்ய தூதராக பணியாற்றி வந்தவர் ஆன்ட்ரே கர்லோவ்.இவர் அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் ரஷ்ய…