கடாபியிடமிருந்து பணம் பெற்ற வழக்கு: சர்கோசியிடம் விசாரணை

பாரிஸ்: மறைந்த லிபிய தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கில் யூரோக்களைப் பெற்றது தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியிடம் போலீஸ் நிலையத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு பிறநாடுகளிடம் கட்சிகள் நிதி பெறுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் 21 மில்லியன் யூரோக்களை மட்டுமே பெறலாம். அதற்கு மேல் பெற்றால் அது சட்டவிரோத நிதியாக கருதப்பட்டு…

ஒரு அங்குலத்தை கூட விட்டு தரமாட்டோம் ‘: டிவி’யில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு

பெய்ஜிங்: ஒரு அங்குல நிலத்தை கூட பிற நாட்டுக்கு விட்டுத்தரமாட்டோம் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.3வது முறையாகவும் ஜி ஜின்பிங் அதிபராக பதவி வகிக்க சீன அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்கு பிறகும் அவர் அதிபராக நீடிக்க உள்ளார்.இதையடுத்து ‘டிவி’ மூலம் ஜி ஜின்பிங் பேசியதாவது:…

இந்தியா – பாக்., பேச்சு ஐ.நா., ஊக்குவிக்கிறது

நியூயார்க்: ஜம்மு – காஷ்மீர் பிரச்னையை ஐ.நா., பொது செயலர் அண்டோனியோ கட்டர்ஸ் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான வேறுபாட்டை நீக்க பேச்சை ஊக்குவித்து வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவும் பதற்றம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ”நிலைமையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இரு நாடுகளுக்கு…

சிரியா அதிபர் சர்ச்சை பேச்சு வீடியோ

டமாஸ்கஸ்: ராணுவ வீரர்களின் ஒவ்வொரு தோட்டாவும், எதிரியை வீழ்த்த வேண்டுமென சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ராணுவ வீரர்களிடையே பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்தின் அரசு படைக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடக்கிறது. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரானும், கிளர்ச்சிப்…

கை நிறைய ஸ்நாக்ஸ்… மனிதர்களைப் போல கால்களில் நடந்து அசத்தும் அமெரிக்க கொரில்லா!

நியூயார்க்: அமெரிக்க வனவிலங்கு அருங்காட்சியகத்தில் இரண்டு கால்களில் மனிதர்களைப் போல கொரில்லா நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன் என்றாலும், இன்னும் குரங்குகள் பெரும்பாலும் இரண்டு கைகள் மற்றும் கால்களைப் பயன்படுத்தியே நடப்பதுண்டு. இந்நிலையில், அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நடந்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது லூயிஸ் என்ற கொரில்லா குரங்கு.…

சீன அமைச்சரவை மாற்றம்: புதுமுகங்கள் நியமனம்

பீஜிங்: சீன அதிபராக, மீண்டும் பதவியேற்றுள்ள, ஜி ஜின்பிங், தன் பழைய அமைச்சரவையை முழுவதுமாக மாற்றி, பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.’சீனா அதிபர் மற்றும் துணை அதிபராக, ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது’ என இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, சட்டம் நிறைவேற்றிய பின், இரண்டாவது முறையாக, சீன அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றார், ஜி ஜின்பிங்.பதவியேற்ற…

இந்திய–அமெரிக்க பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

வாஷிங்டன்: கடந்த ஆண்டு அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது டிரம்புடன் நடந்த சந்திப்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு ஏப்ரலில் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதில், இருநாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இந்தியாவின் 2 அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்க…

மலேசிய விமானம் குறித்து புதிய தகவல்

சிட்னி: 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து, பெய்ஜிங்கிற்கு 293 பயணிகளுடன் சென்ற எம்.எச் 370 விமானம் மாயமானது. மிகப்பெரிய அளவில் மலேசியா மற்றும் சீனா இணைந்து கடல் பகுதியில் 3 ஆண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் எந்த பயனும் கிடைக்காததால் கைவிடப்பட்டது.இந்த விமானம் குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமானங்களை தேடும் துறையில் ஆர்வமுள்ள பீட்டர் மோகன்…

பயங்கரவாதிகள் மீது பாசம் பாக்.,கிற்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. தலிபான், ஹக்கானி போன்ற பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன. இது ஒட்டுமொத்த உலக பாதுகாப்புக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த பாகிஸ்தான் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத இயக்கங்களுக்கான ஆதரவை…

நான்காவது முறையாக அதிபரானார் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக, விளாடிமிர் புடின், 65, நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், 76 சதவீத ஓட்டுகள் பெற்று, அவர் வென்றார். ரஷ்ய அதிபர் பதவிக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. அதில், மூன்று முறை அதிபராக இருந்த, விளாடிமிர் புடினை எதிர்த்து, பலர் போட்டியிட்டனர். பல்வேறு சலுகைகள், குழந்தைகளை கவரும் நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்தத்…