வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதி திடீர் மாற்றம்

டாக்கா: வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 300 உறுப்பினர்களை கொண்ட வங்காளதேசம் பாராளுமன்றத்துக்கு டிசம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் நவம்பர் 19-ம் தேதி எனவும், வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 29-ம்…

ரஜினி தேர்தலில் நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்- கவுதமன் அதிரடி அறிவிப்பு

சென்னை: ரஜினி தேர்தலில் நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன் என இயக்குநர் கவுதமன் அதிரடியாக அறிவித்துள்ளார். இயக்குநர் கவுதமன் இன்று அரசியல் கட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பண்பாட்டை வென்றெடுத்த இளைஞர்கள், அரசியலையும் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் அமைப்பை தொடங்குகிறோம். கட்சியின் பெயர் மற்றும் கொடி, பொங்கலுக்கு பின்னர் நடைபெறும் மாநில மாநாட்டில்…

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரிந்தது

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (உள்ளூர் நேரப்படி) மாலை சுமார் 4.30 மணியளவில் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒருவர் காருக்கு தீவைத்ததோடு, கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்த 3 பேரில்…

ஜோர்டான் வெள்ளம்: 11 பேர் பலி; 4000 பயணிகள் வெளியேற்றம்

ஜோர்டானில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 4000 சுற்றுலாப் பயணிகள் பழம்பெரும் நகரான பெட்ராவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். தலைநகர் அமானின் தென் மேற்கு பகுதியில் உள்ள மடாபாவில், காரில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து பேரை மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடி வருகின்றனர். அக்கபா நகரில் பெய்த மழையால் அங்கு அவசர நிலை…

மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா- அதை கவனித்து வரும் இந்தியா

க்யாக்பியூ: மியான்மர் நாட்டின் க்யாக்பியூ நகரில் துறைமுகம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே, பாகிஸ்தானின் குவாதர் நகரில் துறைமுகத்தை சீனா கட்டமைத்து வருகிறது. இதேபோன்று இலங்கையின் அம்பந்தோட்டாவில் துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இவற்றை தவிர்த்து வங்காள தேசத்தின் சிட்டகாங்க நகரில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு…

ஜோர்டானில் ஏற்பட்ட கனமழைக்கு 11 பேர் பலி- 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

அம்மான்: ஜோர்டான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 11 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு உதவ சென்றுள்ளன. இந்த கனமழையால் பெட்ரா நகரின் சில பகுதிகள் மற்றும்…

பிரான்ஸ் நாட்டில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்த வெங்கையா நாயுடு

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரில் பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிரான்ஸ் சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி உஷாவும் சென்றுள்ளார். முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.…

சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

மொகடிஷு: சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம்…

காதலை மறுத்த பிரியா.. அரிவாளை எடுத்த இசக்கிமுத்து.. ஓடி வந்த அண்ணனுக்கும் வெட்டு!

ஏர்வாடி: ஒரு வருஷமாக எத்தனையோ முறை தனது காதலை சொல்லியும் ஏற்காத காரணத்தினால் கல்லூரி மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்வாடி அருகே உள்ள பகுதி ராமகிருஷ்ணாபுரம். இங்கு வசித்து வரும் பிரியா என்னும் இளம் பெண்ணை இசக்கி முத்து என்பவர் காதலித்து வந்துள்ளார். அதனால் போன வருடம் பிரியாவை நேரில் சந்தித்து…

காரணமே இல்லாமல் 6 நாட்களில் 15 சிசுக்கள் பலி: என்ன நடக்கிறது அசாமில்?

அசாமில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் கடந்த ஆறு நாட்களில் 15 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் உள்ள ஜோர்ஹாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கூறியது பின்வருமாறு, மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் இந்த…