சிகாகோ மருத்துவமனையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி- காவல்துறை அதிகாரி படுகாயம்

சிகாகோ: அமெரிக்காவின் சிகோகா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்த நபர் ஒருவர், திடீரென பெண் ஒருவரை நோக்கி தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார். இதையடுத்து, தன்னைத்தானே சுட்டுக்கொன்று விட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரை மாய்த்துக்கொண்டார். உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணி முதல்…

80 பேர் பரிதாப பலி.! 1000 பேர் மாயம்.!! அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்.!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் காட்டுத்தீயானது மளமளவென பரவி வருகிறது. இந்த காட்டுதீயானது கேம்ப் கிரீக் எனும் இடத்தில் தொடங்கி., மணிக்கு 50 மைல் வேகத்தில் வீசப்பட்ட காற்றின் காரணமாக சில மணிநேரத்திலேயே 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகள் அனைத்தும் தீக்கிரையாயின. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் பெரும்…

பிரிட்டனில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தபடுவதாக தகவல்

லண்டன்: பிரிட்டனில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த வருடம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை (பிரெக்சிட்) ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதிக்குள்…

முகநூல் நிறுவனருக்கு ஆப்பு அடிக்கும் முதலீட்டாளர்கள். பதவி விலகுவாரா மார்க் ஜூபெர்க்?

கலிஃபோர்னியா : உலகின் மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம் முகநூல் ஆகும். இதன் நிறுவனர் மார்க் ஜூபெர்க் ஆவார். தற்போது அவருக்கு எதிராக பேஸ்புக் முதலீட்டாளர்கள் சிலர் காய் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. ஏனெனில் பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ.பற்றும் சேர்மன் ஆகிய இரட்டைப் பதவியில் இருக்கிறார் மார்க். எனவே இவர் எதாவது ஒரு…

மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

சென்னை: சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. அதிமுகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆருக்கு, கடந்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் எம்ஜிஆர் நினைவு வளைவு மெரினாவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. கடைசியாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 30-ஆம் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு…

தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது சரக்கு ரயிலில் சிக்கிய நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்

அனந்தபூர்: ஆந்திராவில் ஓடும் ரயிலின் அடியில் சிக்கிய நபர், சாதுர்யமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பயணி ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. ரயிலைக் கண்டு அதிர்ச்சியடையாமல், சாதுர்யமாக யோசித்த அந்நபர்,…

கஜாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்

சென்னை: கஜாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் நீட்டித்து வழங்கியுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. போகும் போது 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதாவது நாகை, சஞ்சை,…

அப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா?

ஹூப்ளி: வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது எல்லாருக்கும்! இப்படியும் ஒரு தகப்பன் இருப்பாரா? என்று கூடவே எரிச்சல் கேள்வியும் எழுகிறது. கர்நாடகத்தின் ஹூப்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 வயது குழந்தையுடன் தந்தை அந்த பகுதியில் பிச்சை எடுக்கிறார். பிறகு பிச்சை எடுத்த பணத்தில் மதுக் கடைக்குப் போய் ஃபுல்லா சரக்கு ஏத்திக்கிறார். சென்னம்மாசிலை…

முதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா? இரும்பா? – ஸ்டாலின் கேள்வி

சென்னை: புயல் பாதித்த இடங்களுக்கு செல்லாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இல்லை இரும்பா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறுகையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் செல்லாத முதல்வரை கண்டிக்கிறேன். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் தென்னை…