வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு: ஜூலை 9-இல் கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு – ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு…

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கட்டணம் எவ்வளவு?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 11 முதல் 18-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-ஆம் தேதி தரவரிசைப்…

திருப்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த பானுமதி, லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 வருடங்களுக்குள் சாலை விபத்துகளைப் பாதியாகக் குறைக்க இலக்கு.. விஜய பாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க இலக்காகக்க் ஒண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர், தமிழககத்தில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும்,…

சாட்டை திரைப்பட பாணியில் பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியர்களை கண்ணீருடன் அனுப்பி வைத்த மாணவர்கள்!

பணியிட மாறுதலில் சென்ற ஆசிரியர்களை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாணவர்கள் கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர். வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியர்கள் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். வேறு பள்ளிக்கு அந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க முடியாமல் பள்ளி மாணவர்கள் கவலையடைந்தனர். நேற்று பள்ளியில்…

அடுத்து டிரம்ப், கிம்முடன் சந்திப்பு: கமலை கலாய்க்கும் ஜெயகுமார்!

நடிகர் கம்ல்ஹாசன் அரசியலில் களமிறங்கியதும் அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். தற்போது கமலின் இந்த சந்திப்புகளை அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்துள்ளார். பிணரயி விஜயன், நல்லகண்ணு, சீமான் என ஆரம்பித்த கமல் கருணாநிதி, மம்தா பேனர்ஜி, கெஜ்ரிவால், குமாரசாமி என பயணித்து தற்போது ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்துள்ளார். இது அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி…

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதில் மறு கூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல்…

கால்நடை மருத்துவம்: 12,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

பி.வி.எஸ்சி. உள்ளிட்ட கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர மொத்தம் 12,217 மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கால்நடை மருத்துவம் – கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன.…

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 – 19 ஆம் ஆண்டுக்கான வேளாண் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, ஜூன் 17 -ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் தேதி ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.…

வேளாண் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு: கோவை மாணவர்களுக்கு குஜராத், ம.பி.யில் தேர்வு மையம்

இந்திய அளவிலான வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த கோவை மாணவர்களுக்கு குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நடத்தப்படும் இளநிலை வேளாண்மை, தொழில்நுட்பப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவிலான…