போராட்டகளமான தூத்துக்குடி.. கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் போலீஸ்.. ஒரே பரபரப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம்…

கோவை: 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு!

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்தின் பின்புறம் உள்ள காடம்பாடி பிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த். வயது 45. இவர் இதே பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். இவர் தனது…

அதிமுக கட்சி நிதியை அண்ணிக்கு வழங்கிய தொழிற்சங்க செயலாளர்!

அ.தி.மு.க.வின் மாநில தலைமைக் கழகப் பேச்சாளராக இருப்பவர் தூத்துக்குடியின் கருணாநிதி. மே.7ம் தேதி அன்று நகரின் கட்சியின் தொழிற்சங்கத்தின் செயலாளர் நடத்திய முறைகேட்டினை விவரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைக் கழகத்திற்கு புகார் மனு அனுப்பியிருக்கிறார்.கட்சியில் நடந்த, கட்சிக்குப் புறம்பான வகையில் கட்சி நிதியை கட்சியின் தலைமை நிர்வாகியே வழங்கத் துணை போனதை கட்சியின் நிர்வாகியே வெளிப்படுத்தியது நகரின்…

30% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு.. பீதியூட்டும் நிபா வைரஸ்.. அறிகுறி, சிகிச்சை வழிமுறைகள் என்ன?

சென்னை: கேரளாவில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிபா வைரஸ் பாதிப்பு, அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா உள்ளிட்டவற்றுக்கும் பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். நிபா வைரசில் இருந்து தப்பிக்க அது பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மருந்துகள் இல்லை என்ற தகவல்கள் இந்த பீதியை இன்னும் அதிகரிக்கின்றன. உலகில் முதல் முறையாக, மலேசியாவில் 1998ல் நிபா வைரஸ்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சி போராட்டம் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று கடையடைப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி என அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி…

கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் பேச விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு…

இன்று முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கென மொத்தம் 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர இன்று தொடங்கி அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை…

மாணவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ! அரசு புதிய உத்தவு..!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறியதாவது : கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 7-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்…

போதையில் பெற்ற பிஞ்சுக்குழந்தையை மிதித்து கொன்ற தாய்

சென்னை டிபி.சத்திரம் ஷெனாய் நகரை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது பெயர் புஷ்பம். ஏற்கனவே வேலு என்பவரை முதல் திருணம் செய்துகொண்ட பிரியங்கா கருத்துவேறுபட்டால் இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தினேஷிற்கும் பிரியங்கவிற்கும் பிறந்த குழந்தைதான் புஷ்பம். தனது இரண்டாவது கணவர் தினேஷ் குற்ற செயல்களின் காரணமாக போலீசார் கைது செய்ததால் திரும்பவும் தன்…

முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்திருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 20172018ம் கல்வி ஆண்டில் 13,631 மாணவர்கள், 14,866 மாணவிகள் உள்பட மொத்தம் 28,497 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 25,069 பேர் தேர்ச்சி பெற்றனர். 2,097 மாணவர்கள், 1,331…