பைனலில் அன்கிதா

குவாலியர்: மத்திய பிரதேசத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனை அன்கிதா முன்னேறினார். ம.பி.,யில் உள்ள குவாலியரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் யனா சிஜிகோவாவுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றிய அன்கிதா, இரண்டாவது செட்டில் 4-0 என…

கோப்பை முத்தமிடுமா சென்னை: பைனலில் பெங்களூருவுடன் மோதல்

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., தொடரின் பைனலில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெ ளிப்படுத்தி வரும் சென்னை அணி, இரண்டாவது கோப்பை வென்று, உற்சாகம் தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின், நான்காவது சீசன், கடந்த ஆண்டு டிச., 17ல் துவங்கியது. 90 லீக் போட்டிகள், 4 ‘பிளே ஆப்’…

ஸ்மித்தை விளாசும் பிலாண்டர்

போர்ட் எலிசபெத்: ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என, தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர் ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன்…

வாசிம் ஜாபர் இரட்டை சதம்

நாக்பூர்: இரானி கோப்பை போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா வீரர் வாசிம் ஜாபர், இரட்டை சதம் விளாசினார். முதல் தர கிரிக்கெட்டில் இவர் அடித்த 8வது இரட்டை சதம் இது. ரஞ்சி கோப்பை ‘சாம்பியன்’ விதர்பா, ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிகள் மோதும் இரானி கோப்பை (5 நாள்) கிரிக்கெட் நாக்பூரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல்…

மந்திரக்காரா மாய மந்திரக்காரா…: வியக்க வைக்கும் வாஷிங்டன் சுந்தர்

கொழும்பு: முத்தரப்பு தொடரில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ‘சுழலில்’ மாயாஜாலம் காட்டுகிறார். ‘பவர்பிளே’ ஓவர்களில் இவரது மந்திர பந்துவீச்சில் எதிரணிகள் சிதறிப் போகின்றன. இவர், தொடர்ந்து அசத்தும் பட்சத்தில், இந்தியா கோப்பை வெல்வது உறுதி. இலங்கையில் நடக்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா, பைனலுக்கு முன்னேறியது. இத்தொடரின் சிறந்த கண்டுபிடிப்பாக இளம் வாஷிங்டன்…

ரோஹித் சர்மா அதிரடி..! பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

பங்களாதேஷ்க்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் போட்டியிடும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இன்று இந்தியா-பங்களாதேஷ்க்கு இடையிலான போட்டி கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ்வென்ற பங்களாதேஷ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்…

`ஓய்வுநேரத்தை இப்படித்தான் கழிக்கிறேன்!’ – தோனி பகிர்ந்த வீடியோ

இலங்கை டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஓய்வு நேரத்தை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கழித்து வருகிறார். தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் உடனடியாகத் தொடங்கிய இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரோஹித் ஷர்மா…

சவால்களை சந்திக்கத் தயார் * ஷர்துல் தாகூர் நம்பிக்கை

கொழும்பு: ”அணியில் ‘சீனியர்’ பவுலர்கள் இல்லாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளை சவால்களாக எடுத்துக் கொண்டு, சாதிக்கத் தயார்,” என, ஷர்துல் தாகூர் தெரிவித்தார். இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா என, முன்னணி ‘வேகங்கள்’ ஓய்வில் உள்ள நிலையில், புதிய வரவு ஷர்துல் தாகூர், வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை தந்து…

கோஹ்லிக்கு இரண்டு உலக கோப்பை: நாக்பூர் ஜோதிடர் கணிப்பு பலிக்குமா

புதுடில்லி: ‘சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி, 100 சதங்களுக்கும் மேல் அடிப்பார். ‘டுவென்டி-20′, ஒருநாள் உலக கோப்பை வெல்வார்,’ என, நாக்பூர் ஜோதிடர் கணித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் மூன்றுவித அணிக்கு கேப்டன் கோஹ்லி, 29. சர்வதேச அரங்கில் ரன் மழை பொழிகிறார். இவர் குறித்து நாக்பூர் ஜோதிடர் நரேந்திர பன்டே கூறியது: கோஹ்லியின் கிரக நிலைகள் மிகவும் வலிமையாக உள்ளன.…

152 ரன்கள் இலக்கு..! இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

இந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பு 152 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது.4-வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ்…