பி.சி.சி.ஐ-யின் புதிய நிர்வாகிகள் யார்? : இன்று அறிவிக்‍கிறது உச்சநீதிமன்றம்!

பி.சி.சி.ஐ-யின் புதிய நிர்வாகிகள் யார்? : இன்று அறிவிக்‍கிறது உச்சநீதிமன்றம்!இந்திய கிரிக்‍கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI-யின் புதிய நிர்வாகிகள் பெயரை, உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்‍க உள்ளது. BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக நீதிபதி லோதா குழு அளித்த பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படாததால், அதன் தலைவர் திரு. அனுராக்‍ தாக்‍கூர் உள்ளிட்ட நிர்வாகிகளை…

கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.. ஐந்தே ரன்களில் வொயிட்வாஷை தவற விட்ட இந்தியா

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி போராடி ஐந்தே ரன்களில் தோல்வியடைந்தது. முதல் இரு போட்டிகளை இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது. இந்தியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள்…

அலங்காநல்லூர் போராட்டம்: கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் ஆச்சர்ய ஆதரவு!

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள்…

இந்தியா அசத்தல் வெற்றி : கோஹ்லி, கேதர் ஜாதவ் அதிரடி ஆட்டம்!

இந்தியா அசத்தல் வெற்றி : கோஹ்லி, கேதர் ஜாதவ் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் ஆகியோாின் அதிரடி ஆட்டத்தால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது முதலில் விளையாடிய…

கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்

புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் சதமடித்து கைகொடுத்தனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இன்று, முதல் போட்டி புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. யுவராஜ் சிங் லெவன் அணியில் இடம் பிடித்தார். ரகானே,…

சவுரவ் கங்குலிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த நிலையில், வரும் 19ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மித்னாப்பூரில் உள்ள வித்யாசாகர்…

ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ அகுட் சாம்பியன் சென்னை ஓபன் டென்னிஸ்

ஸ்பெயின் வீரர் ரோபர்ட்டோ அகுட் சாம்பியன் சென்னை ஓபன் டென்னிஸ் சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்த ஏ.டி.பி.அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன்டென்னிஸ் போட்டியின் 2017ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர்ரோபர்ட்டோ பாடிஸ்டா அகுட் கைப்பற்றினார். தெற்கு ஆசியாவின் ஒரே ஏ.டி.பி. அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு அரங்கில் கடந்த…

சென்னை ஓபன்: பவுடிஸ்டா சாம்பியன்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ராபர்டோ பவுடிஸ்டா. பைனலில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை தோற்கடித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், தெற்காசியாவில் நடத்தப்படும் ‘ஏ.டி.பி., வேர்ல்டு டூர்’ அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் பவுடிஸ்டா, ரஷ்யாவின் மெட்வடேவை…

நல்லா என்ஜாய் பண்ணி ஜாலியா ஆடுங்க தல.. டோணிக்கு கோஹ்லி மெசேஜ்!

கோஹ்லி கூறுகையில் தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து டோணி விலகி விட்டதால் அவரது விளையாட்டை அனுபவித்து ஆட முடியும். சுதந்திரமாக ஆட முடியும். ரிலாக்ஸ்டாக ஆட முடியும். ஆரம்ப காலத்தில் பார்த்த அதே டோணியை மீண்டும் பார்க்க ரசிகர்கள் மட்டுமல்ல நானும் கூட ஆர்வமாகவே காத்திருக்கிறேன். எனவே ஆரம்ப காலத்தில் ஆடியது போல அடித்து ஆடி அதிரடி விளையாட்டை டோணி…

சானியா ஜோடிக்கு 2017ம் ஆண்டின் முதல் சாம்பியன் பட்டம்

2017ம் ஆண்டின் முதல் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மாட்டக் சான்ட்ஸ் ஜோடி கைப்பற்றியது.மகளிர் இரட்டையர் பிரிவில் மகுடத்தை வென்றது சானியா, மாட்டக் சான்ட்ஸ் ஜோடி. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டியில்மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் போட்டித் தரநிலையில் 2-ம் இடத்தில் உள்ள…