ஐபிஎல்: ஐதராபாத்துக்கு 219 ரன் இலக்கு.பெங்களூரு அதிரடி ஆட்டம்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றை ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலனை

அபுதாபி : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமான டாஸ் போடும் முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி,1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள்நாட்டு அணியின்…

நல்ல வீரர்களை வச்சுகிட்டு இந்தியா இப்படி செய்றது சுயநலம்!! ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆதங்கம்

சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஆடமறுக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் அதிருப்தி தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்நிலையில், அடிலெய்டில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த…

ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா

டோங்கே சிட்டி: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில், மலேசியாவை வீழ்த்திய இந்திய அணி, பைனலுக்கு முன்னேறியது. தென் கொரியாவில், பெண்களுக்கான 5வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா மற்றும் தென் கொரியா என, 5 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஜப்பான் (4-1), சீனாவை (3-1) வென்ற இந்திய அணி,…

அம்பாதி ராயுடு அபார சதம்.. பவுலிங்கில் சிறந்த ஹைதராபாத்தை கதறவிட்டு சென்னை வெற்றி

ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 46வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ஷிகர் தவானுடன் கேப்டன்…

கொண்டாடாமல் திண்டாடியது ஏன்

புனே: பெங்களூரு கேப்டன் கோஹ்லியை போல்டாக்கிய ஜடேஜா, கொண்டாடாமல் தவித்த போட்டோ, சமூகவலைதளங்களில் ‘வைரலாக’ பரவி வருகிரது. சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய போட்டி புனேயில் நடந்தது. இதில், போட்டியின் 7வது ஓவரை வீசிய சென்னை அணியின் ஜடேஜா, முதல் பந்தில், பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லியை போல்டாக்கினார். அவுட்டான விரக்தியில், வழக்கம் போல பவுலரை முறைத்து பார்த்தார்…

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷூக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு

மதுரை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஜனாதிபதி, முதல்வர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களும், பாராட்டும்…

சொதப்பும் மில்லினியர்கள்: பரிதவிக்கும் ஐபிஎல் அணிகள்!

இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் தேர்வான வீரர்கள் சொதப்பி வருவதால் செய்வதறியாமல் தவிக்கின்றன அணிகள். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி ஜெயதேவ் உனாட்கட் – ரூ. 11.50 கோடி மனீஷ் பாண்டே – ரூ. 11 கோடி கேஎல் ராகுல்…

பெங்களூரு அணிக்கு 214 ரன்கள் இலக்கு

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 11வது ‘சீசன்’ நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். ரோகித் விளாசல்மும்பை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி…

இந்திய பெண்கள் அணி அசத்தல்

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், கேப்டன் மிதாலி ராஜ், தீப்தி சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இந்தியா வந்த இங்கிலாந்து பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும்…