உயிர் இருந்தால் மரங்களைஅதே இடத்தில் நட உத்தரவு

சென்னை;”சென்னையின் பல இடங்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு உயிர் இருந்தால், அவற்றை அதே இடங்களில் நட வேண்டும்,” என, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ‘வர்தா’ புயல் பாதிப்புகள் குறித்து, சென்னை மாநகராட்சியில், கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்த பின், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டி:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள்,…

‘நன்றாக இருக்கிறார்’

”தி.மு.க., தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார்,” என, அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி எம்.பி., கூறினார்.அவர் அளித்த பேட்டி:கருணாநிதியின் உடல்நலம் எப்படி உள்ளது; அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?அவர் நலமுடன் இருக்கிறார்.தி.மு.க., அமைப்பு செயலர், டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி:கருணாநிதியின் உடல் நலம் எப்படி உள்ளது? நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. எப்போது வீடு திரும்புவார்?ஓரிரு நாளில் வீடு…

சபை முடக்க நேரத்துக்கான சம்பளத்தை திருப்பி தரும் எம்.பி.,

புவனேஸ்வர்;பார்லி., முடக்கப்பட்ட நேரத்துக்கான தன் சம்பளத்தை திருப்பி தருகிறார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தள லோக்சபா, எம்.பி., பைஜயந்த் ஜெய் பாண்டே.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது; இந்த கட்சியின் லோக்சபா எம்.பி.,யான பைஜயந்த் ஜெய் பாண்டே, லோக்சபா முடக்கப்பட்ட நேரத்துக்கான தன் சம்பளத்தை திருப்பி தருவதாகக் கூறியுள்ளார்.இது…

வங்கிகள் மீது நம்பிக்கையிழப்பு

பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், மக்கள் பணமின்றி தவிக்கின்றனர். மக்கள் பணம், வங்கிகளில் பத்திரமாக இருப்பதாக அரசு கூறுகிறது; ஆனால், தேவைப்படும் நேரத்தில் பயன்படாமல், வங்கியில் துாங்கும் பணத்தால் அவர்களுக்கு பயனில்லை. வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.ஆனந்த் சர்மா,முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,மக்கள் பாடம் புகட்டுவர்செல்லாத நோட்டு…

9 மாதமாக துணைவேந்தர் இல்லை:மீன்வள பல்கலையிலும் சிக்கல்

தமிழ்நாடு மீன்வள பல்கலையிலும், ஒன்பது மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பல்கலை அலுவலர்கள், துணை வேந்தரை நியமிக்கக் கோரி, கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் ஓய்வு பெற்றால் மீண்டும் புதிய துணைவேந்தர்களை நியமிப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. தற்போதைய நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கு இரண்டாவது ஆண்டாகவும், சென்னை பல்கலைக்கு, 11 மாதங்களாகவும், அண்ணா பல்கலைக்கு, ஏழு…

‘மனநிலை பாதிக்கப்பட்டவர்’இளங்கோவனுக்கு அரசர் பதிலடி

புதுக்கோட்டை:”என் கருத்தை, ராஜிவ் கொலை வழக்கோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதையே காட்டுகிறது,” என, இளங்கோவனுக்கு, திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்து உள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று அளித்த பேட்டி:’மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, வெள்ளை அறிக்கை வேண்டாம்’ என, நான் சொன்ன கருத்து, அவரோடு பணியாற்றியவன்…

சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்

சென்னை:’ஜெ., மரணம் குறித்த உண்மை தகவல்களை வெளியிட வேண்டும்’ என, ஆர்.கே.நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு சசிகலா வரவேண்டும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால், கட்சியின் உண்மையான விசுவாசிகளும், தொண்டர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருவதோடு, கண்டன போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர்.…

நிதி அமைச்சகத்தின் குளறுபடி :சுப்ரமணியன் சாமி குற்றச்சாட்டு

கோவை;”ரூபாய் நோட்டு குளறு படிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் சரியான திட்டமிடல் இன்மையே காரணம்,” என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறினார்.ஆயுர்வேத சிகிச்சைக்காக நேற்று கோவை வந்த, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து, சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. அவர் எப்படி இறந்தார் என, எனக்கு…