“இந்த பாச்சா எல்லாம் இங்கு எடுபடாது” – கொந்தளிக்கும் ஸ்டாலின்!

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை, நாளை…

அவர் ஒன்றும் கட்சியின் பொது செயலாளரோ… ஒருங்கிணைப்பாளரோ இல்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு

கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பவர் தலைமையின் கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும்அவர் ஒன்றும் கட்சியின் பொதுச் செயலாளரோ, ஒருங்கிணைப்பாளரோ இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டதுகுறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் பதவியை…

‘அதிநாயகே’ என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர் வலியுறுத்தல்

புதுடில்லி: தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும் எனவும் திருத்தம் வேண்டும் எனவும் காங், பா.ஜ. இடையே போட்டா போட்டி ஏற்படுள்ளது.அசாமைச் சேர்ந்த, ராஜ்யசபா, காங்கிரஸ் எம்.பி.,யான, ரிபுன் போரா, ராஜ்யசபாவில் தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.அதில் ‘ஜன கன மண’ என்று துவங்கும் நம் தேசிய கீதத்தில், சிந்து என்ற வார்த்தை அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ளது. நாட்டின்…

ரஜினிக்கும் எனக்கும் பிளவு உறுதி… கமல் பளீர் பதில்…!

திரைத்துறையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். ரஜினி தன்னுடைய அரசியலை ஆன்மீக அரசியல் என்று கூறுகிறார். கமல் பகுத்தறிவு மற்றும் திராவிட அரசியல் என்று கூறுகிறார். சினிமா வாழ்கையில் மட்டும் அல்ல இவர்கள் இருவரும் அரசியலிலும் நேர் எதிர் பாதையில் தான் தங்களுடைய பயணத்தை துவங்கியுள்ளனர். இந்நிலையில்…

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி

புதுடில்லி: எதிர்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக சி.பி.ஐ.,யை மத்திய அரசு பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: எதிர்கட்சிகளை அச்சுறுத்தவும் , தொந்தரவு செய்யவும் சி.பி.ஐ பயன்படுத்துகிறது. தற்போது லாலு பிரசாத் எதிராக வழக்குகள் பதிய சி.பி.ஐ.,க்கு அழுத்தம் அளிக்கப்படுகிறது. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைக்காக பிரதமர் மோடியின் அடுத்த இலக்கு…

ஊழலை எதிர்த்த அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.. சகாயம் ஐஏஎஸ் அதிரடி

ஊழலை எதிர்த்த அன்றே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் களம் கண்டுவரும் தருணத்தில் நேர்மையான அதிகாரிகளின் அடையாளமாக திகழும் சகாயம் இப்படி பேசியிருப்பது அவரை அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் நேர்மைக்குப் பெயர்போன அதிகாரியான சகாயம் நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும்…

மீண்டும் வகையாக சிக்கும் ஹெச்.ராஜா! விவசாயி அய்யாக்கண்ணுவை தாக்கிய பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது தரணுமாம்…

விவசாயிகள் சங்க தலைவா் அய்யாக் கண்ணுவை தாக்கிய பெண்ணுக்கு வீர தமிழச்சி விருது கொடுப்போம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு குழு தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் வந்த…

‘மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அய்யாக்கண்ணு மீது தாக்குதல்’ – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

திருச்செந்தூர் கோயில் அருகில் நோட்டீஸ் வழங்கிய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, பா.ஜ.க மகளிர் அணித்தலைவர் கன்னத்தில் அறைந்து செருப்பை காட்டி இழிவாகப் பேசிய சம்பவத்தை சி.பி.எம். மாநில செயற்குழு கண்டிப்பதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ”விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்…

அகிம்சை கற்றுக்கொடுத்தது தாய் தான்: கமல்ஹாசன் பெருமிதம்!

அகிம்சை என்பதை சொல்லிக்கொடுத்தது தன் தாய்தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய கமல், “நான் மய்யத்தில் இருந்து பார்த்ததால்தான் எனக்கு பல சகோதரிகள் கிடைத்துள்ளனர். நீங்கள் எப்போதும் மய்யத்திலேயே தான் இருப்பீர்களா என்று கேலி செய்கின்றனர். ஆமாம், நான் மய்யத்திலேயேதான் இருப்பேன். மய்யத்தில் இருந்து…

கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் தப்ப முடியாது – முதலமைச்சர் எடப்பாடி அதிரடி

காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த இளம்பெண் உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார். அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி…