பெங்களூரில் கருப்பு பண பதுக்கல்- ரெய்டுக்கு போன அதிகாரிகள் மீது வேட்டை நாயை ஏவிய மூதாட்டி!

பெங்களூர்: கருப்பு பண பதுக்கலை மீட்க சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது பெங்களூர் மூதாட்டி வேட்டை நாய்களை ஏவிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூர் யஷ்வந்த்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சென்றது. ஆனால்…

தமிழகத்துக்கு இனி காவிரி நீர் திறக்க முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு!

டெல்லி: தமிழகத்துக்கு இனி காவிரி நீரை திறந்துவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே நடுவர் மன்ற உத்தரவு தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகள் தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற…

மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல்! பாதுகாப்பு படை வீரர் பலி!

இம்பால்: மணிப்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். மாநிலத்தின் லோக்செளவ் பகுதியில் இன்று தனிநாடு கோரும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. source:…

இன்று காலை நடைபெறவிருந்த பா.ஜ. நாடாளுமன்ற கூட்டம் நாளை ஒத்திவைப்பு

புதுடெல்லி: இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற இருந்த பாரதிய ஜனதா நாடாளுமன்ற கட்சி கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிலவி வரும் கூச்சல், குழப்பம் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. TickTickNews

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். தீவிராவாதிகளின் தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். TickTickNews

சென்னைக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நிறுத்தம்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக அக்டோபர் 11-ல் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் டிசம்பர் 11-ம் தேதி நிறுத்தப்பட்டது. வழக்கம் போல் ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய நீர் இந்த ஆண்டு அக்டோபரில் தான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. TickTickNews

டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கி உள்ளது. இதில் 5 பன்னாட்டு விமானங்கள் வருகை தாமதமாகியுள்ளது. மேலும், உள்நாட்டு விமானம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 விமானம் தரையிறங்க முடியாமல் உள்ளது. ஒரு விமானம் புறப்பாடு தாமதமாகியுள்ளது. மேலும் 53 ரயில்கள் வருகை தாமதமாகி உள்ளது. மேலும் 23 ரயில்களின் நேரம்…

மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் மாற்றம் தாமதம்

புதுடில்லி : மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்டுகளின் பெயர்களை மாற்றம் செய்வதில், பல தடைகள் ஏற்பட்டுள்ளதால், பார்லிமென்டில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்களின் பெயர்களை, சென்னை, கோல்கட்டா, மும்பை ஐகோர்ட்களாக மாற்ற, ஜூலை, 19ல், லோக்சபாவில், சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், மெட்ராஸ் ஐகோர்ட் பெயரை, சென்னை ஐகோர்ட் என்பதற்கு…

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 13 ரயில்கள் ரத்து; 53 ரயில்கள் வருகை தாமதம்

புதுடெல்லி: டெல்லியில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக 53 ரயில்கள் வருகை தாமதமாகி உள்ளது. மேலும் 23 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டும், 13 ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது. TickTickNews

மோடியின் ‘தனிப்பட்ட ஊழல்’ விவரங்கள் என்னிடம் உள்ளன: ராகுல்காந்தி

நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றுவதற்காக சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. உடன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தனிப்பட்ட ஊழல்’ தொடர்பான முழு விவரங்களும் என்னிடம் உள்ளன என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னதாக, ரூபாய் நோட்டு விவகாரத்தில்…