மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனு தள்ளுபடி.!உச்ச நீதிமன்றம் அதிரடி

மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தில் செல்லதுரை மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதால் பதவி நீக்கம் சரியானதுதான். உயர்ந்த பதவியில் இருப்போர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் தெரிவிதுள்ளது. DINASUVADU

மகாராஷ்ட்ராவில் உள்ள காஸ்மோஸ் வங்கியில் ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி கொள்ளை!

மகாராஷ்ட்ராவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ஆன்லைன் மூலம் ரூ.94 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது . ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. DINASUVADU

காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் லண்டனில் சீக்கியர்கள் போராட்டங்கள்

லண்டன் காலிஸ்தான் என தனி நாடு அமைக்கக் கோரியும் அதை எதிர்த்தும் சீக்கியர்களின் இரு பிரிவினர் லண்டனில் தனித்தனியே போராட்டம் நடத்தினர். இந்தியாவில் இருந்து பஞ்சாபை தனி நாடாக காலிஸ்தான் என பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அந்த தீவிர வாதிகள் மறைந்திருந்த…

நாட்டின் மிகப்பெரிய ஊழலில் அம்பானியுடன் மோடியும் கூட்டாளி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.526 கோடிக்கு வாங்கப்பட்ட…

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கற்பழித்த 2 பாதிரியார்கள் சரண்

கேரளா மலங்கரையில் பாவமன்னிப்பு கேட்க வந்த திருமணமான இளம் பெண்ணை பல ஆண்டுகளாக வைத்து பாலியல் பலாத்கார செய்து வந்த பாதிரியார்கள் ஜெய்ஸ் ஜார்ஜ், ஜாப் மாத்யூ, ஆபிரகாம் வர்கீஸ், ஜான் மாத்யூ ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ் ஆகிய பாதிரியார்கள் திருவெள்ளா கோர்ட்டில் இன்று…

நாளை இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு !

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நாளை வழங்குகிறது. முன்னதாக இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைதான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . DINASUVADU

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட., புதிய கட்டுப்பாடு.! ராகுல்காந்தி அதிரடி.!!

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது குறித்து நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. மூன்றாவது அணியை உருவாக்க குறித்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் முதல் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரை அனைவரையும் சந்தித்து ஆலோசனை கேட்டு வந்தார். இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில்…

“புழு விழுந்த உணவை உண்டேன்” – அசர வைக்கும் அன்சார் ஐஏஎஸ் கதை

ஒரு ஏழைக்குடும்பத்தில், மூன்று வேலை உணவில்லா நிலையில், கடின முயற்சியால் படித்து ஐஏஎஸ் அதிகாரியான அன்சாரின் கதை இது. மகாராஷ்டிர மாநிலத்தின் பர்பானி நகரத்தில் ஆட்டோ ஓட்டுநரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் அன்சார் ஷாயிக். இவரது தந்தைக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், பிள்ளைகளின் படிப்பில் கவனமின்றி இருந்துள்ளார். குடும்பத்தில் வறுமை ஆட்டம் போட,…

டில்லி: கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தாக்கியதாக புகார் எழுந்தது. இது குறித்து தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகார் செய்தார்.…

36 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடிய இந்தியர் தாயகம் திரும்பினார்

டில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்கள் உள்பட 29 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று எல்லைப்பகுதியான அட்டாரி-வாகாவுக்கு இன்று பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில், கஜானந்த் சர்மா என்பவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு தனது 36வது வயதில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மாயமானார். அவரது குடும்பத்தார்,…