உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?

ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்தலை நிகழ்த்தியும் கூட அது இன்னும் உங்கள் கைகளுக்கு வரவில்லையா.? – கவலை வேண்டாம், மிக எளிதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டை விண்ணப்பத்தின் நிலையை (ஸ்டேட்டஸ்) பார்க்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் ஆதார் அட்டை பெற அணுகிய சேர்க்கை மையத்தில் உங்கள் வருகைக்கு பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டு நகல்…

ஸ்டாலினை வாயார பாராட்டும் நாஞ்சில் சம்பத் – அடுத்து திமுகதான்..!!

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தவுடன் முற்றிலுமாக ஒதுங்கி போய் விட்டார். பின்னர் திமுகவில் அவர் இணைய போவதாக பரபரப்பு தகவல்கள் பரவின. முதலில் நாஞ்சில் சம்பத் மறுத்தாலும் பின்னர் பத்திரிக்கையாளர்களையும் அதிமுகவினரையும் குழப்ப தொடங்கினார். அதிமுகவில் தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் இன்னோவா காரை மட்டும் திருப்பி ஒப்படைத்து விட்டதாகவும் அதிமுக தலைமை…

காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதே…: ஸ்டாலினிடம் கேட்கின்றனர் திமுகவினர்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை அ.தி.மு.க.,வே தொடருகிறது. ஆனால், அந்த ஆட்சி, மத்திய பா.ஜ., அரசின் நிழல் அரசாகவே செயல்படுகிறது என, பன்னீர்செல்வம் செயல்பாடுகளை வைத்து பலரும் கூறுகின்றனர். திமுகவினர் எண்ணம்: இதனால், பன்னீர்செல்வத்தை இறக்கி விட்டு, முதல்வர் பொறுப்பில், தன்னை நியமித்துக் கொள்ள வேண்டும் என்பதில், சசிகலாவும் தீவிரமாக களம் இறங்கி…

பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி?

லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு, மல்லுக்கட்டி வந்த பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்கூர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அந்தப் பொறுப்பில் அடுத்து யார் நியமிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக அந்த பொறுப்பில் நியமிக்கப்படுபவர், லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இதற்கான ரேஸில் பலர் இருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ்…

கொசுவை ஒழித்தீர்களா? தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக நீதிமன்றம் விதித்த உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று…

நிர்வாணமாக திரிவதால் பெண்கள் மானபங்கம்: சமாஜ்வாதி எம்.எல்.ஏ, பேச்சு

புதுடில்லி: நிர்வாணமாக திரிவது பெண்கள் மத்தியில் கலாசாரமாகி வருவதால், பெங்களூருவில் மானபங்கபடுத்தப்பட்டதாக சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி கூறியுள்ளார். சர்ச்சை: பெங்களூரில், டிச., 31 நள்ளிரவு, பிரபலமான, எம்.ஜி., ரோட்டில், ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஏராளமான பெண்களும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, சிலர், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த பெண்கள், போலீசாரிடம் முறையிட்டனர். இந்த…

“அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இந்தியா திகழும்” – பிரதமர் மோடி நம்பிக்கை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள முதல் 3 நாடுகளுக்குள் இந்தியாவும் இடம் பெறும் என்று திருப்பதியில் நடந்த 104-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். 104-வது மாநாடு திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்டேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 104-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. அதில் நோபல்பரிசு பெற்ற பல…

உத்தரப் பிரதேசத்தில் என்னதான் நடக்கிறது? முலாயம் டெல்லி பயணத்தின் பின்னணி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தந்தை முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. முலாயம் சிங்கைப் பொறுத்தவரை, கடந்த 1989-ல் முதல்முறையாக உத்தரப்பிரதேச மாநில முதல்வரானார். பின்னர், 1991-ம் ஆண்டு பிஜேபி-யிடம் தோல்வியடைந்தார். லோக்தளம் கட்சியில் இருந்து விலகி, கடந்த…

மீண்டும் ஏ.டி.எம் கட்டணமா?

ரூபாய் நோட்டு வாபஸுக்குப் பின், ஏ.டி.எம்-களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், விதிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்தது. இந்த காலக்கெடு முடிந்தும், இதை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, காலக்கெடு நீட்டிக்கப்படாததால், நாடுமுழுவதும் Demonetisation-க்கு முன் இருந்தது போல, ஏ.டி.எம்-களில்…

முதியோர் பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற பெரியவர் சுருண்டு விழுந்து மரணம்

சென்னை ஆர்.ஏ புரத்தில் முதியோர் பென்ஷன் வாங்க மாநகராட்சி பள்ளி வாசலில் வரிசையில் நின்ற முதியவர் மயங்கிவிழுந்து மரணமடைந்தார். விதவைகள் , முதியோர் பென்ஷனாக தமிழக அரசு மாதந்தோறும் ரூ .1000 வழங்கி வருகிறது. தபால் அலுவலகம் மூலம் மாதா மாதம் வீட்டுக்கு சமீப காலமாக இந்த தொகையை அளிப்பதில் அரசு அதிகம் அலைக்கும் வேலையை செய்து வருகிறது.…