துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையீடு.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பேராசிரியை நிர்மலாவின் தொலைபேசி உரயை£டல் மூலம் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அச்சப்படும் நிலை…

பெண் நிருபரை தொட்டுப்பேசிய ஆளுநர்! வலுக்கும் கண்டனக்குரல்கள்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் குறித்தும் அந்த விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோபம் அடைந்த ஆளுநர், நிர்மலா தேவியின் முகத்தை இதுவரை பார்த்தது இல்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது…

போதுமான அளவுக்கு பணப் புழக்கம் உள்ளது… தட்டுப்பாடு தற்காலிகம்தான்- அருண் ஜேட்லி விளக்கம்

டெல்லி: வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் உள்ளதாகவும், போதுமான பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் கிழக்கு பகுதி, பீகார் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று முதல் ஏடிஎம்களில் பணம் இல்லை. அதுபோல் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இந்த…

வேலூர் அருகே மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது மகள் சங்கீதா(17). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 படித்து வந்தார் சங்கீதா. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் ராதா இறந்து விட்டதால், தனது தந்தை டீக்காராமனுடன் தாழனூரில் வசித்து வந்தார் சங்கீதா. பள்ளிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தார்.…

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ஆளுநருடன் சந்திப்பு! நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆலோசனை?

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் ஆலோசனை நடத்தினார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த,…

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

தற்போது நிறைய பேர் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். இன்று உடல் பருமன் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு பல்வேறு உணவுகள் உதவுகிறது. அதில் சில உணவுகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பலரும் அறியாத ஓர் பழம் தான் நோனி. இந்த பழத்தைக்…

SC/ST சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

சென்னை: SC/ST சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபரை…

இனிமேல் முதலில் ஆடினால்தான் வெற்றி?: தலைகீழாக மாறும் ஐபிஎல் நிலவரம்!

ஐபிஎல்-லில் டாஸ் வென்றாலே ஆட்டத்தையும் வென்றது மாதிரிதான் என்கிற கணக்கு தற்போது மாறிக்கொண்டு வருகிறது. உண்மையில் ஐபிஎல் கேப்டன்களும் ரசிகர்களும் எதிர்பாராத திருப்பம் இது என்றே சொல்லலாம். 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ்,…

நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி

மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில்…

காலியாகி கிடக்கும் ஏடிஎம்கள்.. மீண்டும் வருகிறதா #Demonetisation..?

கடந்த சில வாரங்களாகத் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகவே கிடைக்கிறது, அப்படிப் பணம் நிரப்பினாலும் மக்கள் உடனடியாகப் பணத்தை எடுத்து வந்தனர். மக்களின் இந்தச் செயலுக்குப் பலரும் வெவ்வேறான கருத்துக்களைக் கூறி வந்த நிலையில்.. தற்போது இதேபோன்ற நிலைமை மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலவுகிறது.…