பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 12 புதிய பாடப்பிரிவுகள்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக…

மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனு தள்ளுபடி.!உச்ச நீதிமன்றம் அதிரடி

மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான செல்லதுரை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தில் செல்லதுரை மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பதால் பதவி நீக்கம் சரியானதுதான். உயர்ந்த பதவியில் இருப்போர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் தெரிவிதுள்ளது. DINASUVADU

அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்..!! வகுப்புகளை புறகணித்துபோராட்டம்..!!

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். DINASUVADU

மாணவிகளின் பிரச்சினைகளை தெரிவிக்க 14417 என்ற இலவச எண்..!!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிப்பு..!!

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். DINASUVADU

திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி..!!

நாளை நடைபெற உள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த 703 மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர். DINASUVADU

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்..!கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆக.28ம் தேதி வரை காவல் நீடிப்பு..!!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. DINASUVADU

பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாகபள்ளிக்குச் செல்லும்மாணவிகள்தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது…

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி உள்ளிட்ட விவரங்கள் எஸ்.எம்.எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. DINASUVADU

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..?

168 பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 40 சதவீத இடங்களே நிரம்பியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்புக்கென்று தனி மதிப்பு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய சம்பளத்தில் வேலை இருக்கும் என்ற எண்ணமும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இதனால் தங்களது குழந்தைகளை பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டினர்.…

மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது.…