சுய தொழில் துவங்குவதில் இந்தியாவில் ஆர்வம் குறைவு

புதுடில்லி : ‘இந்தியாவில், 5 சதவீதம் பேர் மட்டுமே, சொந்தமாக தொழில் துவங்குகின்றனர்’ என, இ.டி.ஐ., நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், 3,400 பேரிடம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், 18 வயதிற்கு மேற்பட்டோரில், 11 சதவீதம் பேர், தொழில் துவங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதிலும், 5 சதவீதம் பேர் மட்டுமே, சுய தொழிலில் இறங்குகின்றனர். இது, உலகளவில்…

தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விற்பனையில், தனியார் நிறுவனங்கள் இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன.இது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பார்லி.,யில் கூறியதாவது: பொதுத் துறையில், ஐ.ஓ.சி., – பி.பி.சி., – எச்.பி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இதில், 2002, மார்ச்சில், தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அடுத்த மாதம்,…

திவால் நிறுவனங்களால் எல்.ஐ.சி.,க்கு பாதிப்பு?

மும்பை : திவால் நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களில் செய்துள்ள பங்கு முதலீடுகளால், எல்.ஐ.சி.,யின் சொத்து மதிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., பல நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கிறது. இந்நிலையில், சமீபத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சிக்கியுள்ள, கீதாஞ்சலி ஜெம்ஸ்; பங்கு விலையை செயற்கையாக…

தடை, பிரச்னைகளை விலக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் அற்புத காரணி தாமரை மணிமாலை

சென்னை: தொழில் போட்டிகளால் பெரும் தடை, குடும்பத்தில் குதர்க்கமான பேச்சுகள், பிரச்னைகள், வேலைவாய்ப்பில் தடை என்று பலவகையிலும் சிரமப்படுபவர்களுக்கு தீர்வை ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்துகிறது தாமரை மணிமாலை. பிரபஞ்சத்தில் உலா வரும் நல்ல சக்திகளை கிரகித்து அதை தான் இருக்கும் இடத்தில் வெளியிட்டு நன்மைகள் பயக்க செய்கிறது தாமரை மணிமாலை. இதனால் பிரச்னைகள் தீர்ந்து உயர்வு ஏற்படுகிறது. தடைகள்,…

கடும் வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு: மக்காச்சோளம் விலை எகிறியது

சத்தியமங்கலம்: கடும் வறட்சி காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிர் ரூ.30 ஆயிரத்திற்கு விற்கிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், அங்கணகவுண்டன்புதூர், தாசிரிபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், சின்னட்டிபாளையம், சதுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். 3 மாத கால பயிரான மக்காச்சோளம் கால்நடைகளுக்கு சிறந்த…

தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை வெளிநாட்டு ஸ்டென்ட்களை வாபஸ்பெற எந்த நிறுவனத்தையும் அனுமதிக்கவில்லை

புதுடெல்லி: இந்திய சந்தையில் இருந்து ஸ்டென்ட்களை வாபஸ் பெற எந்த ஒரு நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கவில்லை என, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதயத்தில் தமனி அடைப்பை நீக்க ஸ்டென்ட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டு சரி செய்யப்படுகிறது. இவற்றின் விலை ரூ.23,625 தொடங்கி 2 லட்சத்துக்கு மேல் விற்கப்பட்டது. உள்நாட்டு தயாரிப்பு ஸ்டென்ட்கள் விலை குறைவாக…

கோவையில் ரூ.7.50 கோடி மதிப்பிலான 10,000 குவின்டால் மஞ்சள் விற்பனையாகாமல் தேக்கம்

கோவை: மஞ்சள் விலை கடந்த சில ஆண்டாக நஷ்டமாக உள்ளதால், கோவை மாவட்டத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான 10 ஆயிரம் குவின்டால் மஞ்சள் ஒரு ஆண்டாக விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, கோவை மாவட்டங்களில் மஞ்சள் உற்பத்தி பெருவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் விதைப்பு செய்து 10 மாதத்திற்கு பிறகு ஜனவரி, பிப்ரவரியில் அறுவை செய்யப்படுகிறது.…

மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் இ-வே பில் அறிமுகம்

புதுடெல்லி: ‘ஜிஎஸ்டி அமலானதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் முறை அமல் செய்யப்பட வேண்டும்’ என மாநில நிதி அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஜிஎஸ்டியின் படி ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லும்போது, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட இ-வே பில்…

வைர வியாபாரி வீடு, அலுவலகங்களில் ரூ.5,100 கோடி வைரம், நகைகள் பறிமுதல்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்துள்ள ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு நேற்று நீரவ் மோடி மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு எதிராக பண மோசடி வழக்கு பதிவு செய்து, டெல்லி மற்றும் மும்பையில் நீரவ் மோடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில் 5,100 கோடி மதிப்புள்ள வைரங்கள், தங்கக்கட்டி, நகைகள்…

ரயில்வே துறையின் குரூப் சி பிரிவில் 90,000 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு

புதுடெல்லி: ரயில்வே துறையின் குரூப் சி பிரிவில் 89,409 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பு. ரயில்வே துறையின் குருப் சி பிரிவு முதல் நிலை (முந்தைய குரூப் டி) மற்றும் இரண்டாம் நிலை பிரிவிகளில் 89,409 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு அறிவிப்பை ரயில்வே துறை…