ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைமுக மோதலாக மாறியிருக்கிறது. இந்த பிரச்சினையில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில், நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருக்கும் ரூ.9 லட்சத்து 59 ஆயிரம் கோடியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குமாறு கேட்டு கேட்டுள்ளதாகவும், இது மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான தொகை என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, தனது பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய பிரதமர் மோடிக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என்றும், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் உறுதியாக நின்று தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

Leave a Reply