Categories: வணிகம்

வாகனங்களை வாஸ்து படி எங்கு நிறுத்தினால் நல்லது…!

சென்னை: விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். ஆசைகளுக்கு அளவில்லை என்பார்கள். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கூட சைக்கிள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது.

எங்காவது வெளியில் செல்பவர்களும் வாடகை சைக்கிளை தான் எடுத்து செல்வார்கள். சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பவர்கள் அப்பொழுது பணக்காரர்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ வீட்டிற்கு ஒரு கார், பைக் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள்.

பெட்ரோல்,டீசல் விலைகள் எவ்வளவு தான் ஏறினாலும் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை.
முதலில் சொந்த வீட்டை கட்ட ஆசைப்படும் மனிதன் அடுத்த வாங்க நினைப்பது வாகனங்களை தான். சொந்த வீட்டின் முன் ஒரு கார் அல்லது பைக் நிற்பது என்பது பெருமையான விஷயம் தானே.

வாகனங்களை வாஸ்து படி எங்கு நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் அதிக எடையுள்ள வாகனங்களை நிறுத்த கூடாது. ஈசான்ய மூலை ஈசனே குடியிருக்க கூடிய இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் அதன் டயர்களில் ஒட்டியிருக்கும் சேறு, மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில் படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது கெட்டுவிடும்.

எனவே வடகிழக்கு மூலையில் வாகனங்களை நிறுத்த கூடாது.

வடகிழக்கு மூலையைத் தவிர தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் இடமாக அமைத்து

வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கை அமைப்பது நல்லது.

கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது. தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வாகனங்களை நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.

மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின் உச்ச ஸ்தானத்தில் வீட்டின் கேட் இருக்கும் போது வாகனங்களை நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது. மேற்கூறியவாறு உச்ச ஸ்தானங்களில் கேட்டை அமைத்து அதன் வழியே வாகனங்கள் செல்லுமாறு அமைத்துக் கொள்ளலாம்.

அப்படி இல்லாமல் இடப் பற்றாக்குறை உள்ளவர்கள் நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய (இடம்) கேட் அமைக்க வேண்டிய சூழ்நிலை வருமேயானால் அந்த வழியை வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அமைப்பது நல்லது.

தொடர்புக்கு: 83000 21122, 99650 21122

Share
Tags: vivegam

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

10 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

10 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

10 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

10 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

10 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

10 hours ago