மாருதி சுஸிகி, டொயோட்டா கிர்லோஸ்கர், ஃபோர்ட் இந்தியா போன்ற இந்தியாவின் முன்னனி கார் உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தங்கள் உற்பத்தி ஆலைகளை மூடி இருக்கிறார்கள்.

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, ரெனால்ட், நிஸ்ஸான் போன்ற நிறுவனங்களும் தங்களின் உற்பத்தி ஆலைகளை ஆறு நாட்களுக்கு மூடி இருக்கிறார்களாம்.

எல்லாம் கார் உற்பத்தி நிறுவனங்களும் 6 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஃபோக்ஸ் வோகன் மட்டும் சுமார் 17 நாட்களுக்கு தன் உற்பத்தி ஆலைகளை மூட திட்டம் இட்டு இருக்கிறதாம். நவம்பர் 2 – 19 வரை ஃபோக்ஸ் வோகன் உற்பத்தி ஆலை மூடப்பட்டு இருக்குமாம்.

எப்போதும் வழக்கமாக உற்பத்தி ஆலைகளை மூடி வைப்பது கார் உற்பத்தியாளர்களின் வழக்கம் தானாம். ஆனால் இந்த முறை வழக்கத்தை விட கூடுதல் தினங்கள் உற்பத்தி ஆலைகளை மூடி இருப்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாம்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் கடந்த செப்டம்பர் மற்ரும் அக்டோபரில் சரியாக விற்பனை ஆகாத காரணத்தால், டீலர்களிடம் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் தேங்கி நின்று இருக்கிறது. இந்த சரக்குகள் கையில் தேங்காமல் இருக்கத் தான் இந்த முறை உற்பத்தி ஆலைக்கு அதிக நாள் ஓய்வு கொடுத்திருக்கிறர்களாம்.

ஃபியாட் -4%, ஹோண்டா-5%, மாருதி சுஸிகி -10%, நிஸ்ஸான் -2%, டாடா -1%, ஃபோக்ஸ்வோகன் -1% என்று செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்து இருக்கின்றன. இதே போல் கடந்த அக்டோபர் 2017க்கும் அக்டோபர் 2018-க்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் மேற்கூறிய பல நிறுவனங்கள் சுமாரான வளர்ச்சி அல்லது சரிவையே சந்தித்து இருக்கின்றன.

தீபாவளி டிமாண்டில் இரு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் 15 – 35 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறதாம். அதே போல் கார்களுக்கான தீபாவளி டிமாண்டில் 10 – 25 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறதாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கார் கடன்களுக்கான வட்டி விகித உயர்வு, கார் இன்ஷூரன்ஸ்களுக்கு செலுத்தும் பிரீமியத் தொகை அதிகரிப்பு போன்றவைகள் தான் கார் டிமாண்ட் குறைய மிக முக்கிய காரணமாகப் பார்க்கிறார்கள் அனலிஸ்டுகள்.

Leave a Reply