பணக்காரன் ஆவது அவ்வளவு எளிது அல்ல, அதுவும் குறைந்த காலத்தில் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பல பேரின் கனவாக உள்ளது.

நிறையப் பணம் சம்பாதிக்கக் குறுக்குவழி கிடையாது, ஆனால் பெரும் பணத்தை உங்கள் வசமாக்க மாதம் ஒரு தொகையினைத் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும். இது நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமையும். இறுதியில் நீங்கள் நினைத்ததை விட அதிகப் பணம் உங்கள் கையில் இருக்கும்.

சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ பணக்காரன் ஆகி விடலாம் என்று நினைத்தாள் அவன் ஒரு முட்டாள். எனவே இந்தப் பதிவில் வருடத்தின் அடிப்படியில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். உதாரணத்திற்கு நீங்கள் ஐந்து வருட முதலீடு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தல் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும், அதுவும் உங்களது ஆபத்து விபரங்கள் மற்றும் அடிப்படை செலவுகள் போகத் தான் இந்த முதலீடு இருக்க வேண்டும்.

உங்களுக்குக் குறைந்த ஆபத்து உள்ள முதலீடு வேண்டும் என்றால் நீங்கள் ஹைபிரிட் கடன் சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் ஐந்து வருடம் குறைந்த ஆபத்து உள்ள திட்டத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தால், “ஹைபிரிட் கடன் சார்ந்த நிதி” சிறந்த தேர்வாக இருக்கும். இதில் மாதம் ரூ.13,000 என்று 5 வருடத்திற்கு முதலீடு செய்ய வேண்டும், இதற்கு 10% வட்டி வரும். இதன் மூலம் 5 வருட முடிவில் 10 லட்சம் ரூபாய் உங்கள் கையில் இருக்கும்.

அதே போல உங்கள் முதலீட்டை ஒரு ரிஸ்க் உள்ள திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் “சமநிலையான நன்மைகள் நிதி” மூலம் முதலீடு செய்யலாம். இதில் மாதம் 12,500 ரூபாயை 5 வருடத்திற்கு முதலீடு செய்ய வேண்டும், இதற்கு 12% வட்டி தரப்படும். இறுதியில் 10 லட்சம் உங்கள் கையில் இருக்கும்.

அதே ஒருவர் மிக அதிகம் ஆபத்து உள்ள திட்டத்தில் செய்யத் தயாராக இருந்தால் நீங்கள் லார்ஜ் கேப்+மிட் கேப்+ஸ்மால் கேப் நிதியில் முதலீடு செய்யலாம். இந்த முறையில் ஒருவர் மாதம் ரூ.11,500 5 வருடத்திற்கு முதலீடு செய்தால் உங்கள் கைக்கு 10 லட்சம் பணம் கிடைக்கும், இதன் வட்டி விகிதம் 15% ஆகும்.

முதலீட்டாளர்களுக்கு நிறைய அச்சம் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்றும், அப்படியே செய்தலும் இது சரியான நேரமா மியூச்சுவல் பண்ட-ல் முதலீடு செய்ய என்று பல சந்தேகங்கள் இருக்கும்.

இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில் ஒருவர் தாராளமாக எஸ்ஐபி-ல் முதலீடு செய்யலாம். நீங்கள் லாபாப் பாதையில் செல்லச் செல்ல இதில் உள்ள ஏற்ற இறக்கம் ஓரிரு வருடங்களில் மறைந்து போகும்.

Leave a Reply