Categories: வணிகம்

வங்கிகள் கடன் வட்டி குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் உத்தரவு

புதுடெல்லி: வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார். பழைய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பின் பண டெபாசிட் அதிகரித்து விட்டது. மேலும் வங்கி மூலம் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வங்கிகளில் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எனவே கடன் வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியதாவது: ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அதன் பயன் வங்கி பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்றார்போல் வட்டி விகித்தையும் குறைக்க வேண்டும்.
வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை வங்கிகள் உடனடியாக குறைக்க வேண்டும். இதனால் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும். கடந்த வாரம் வங்கிகளுக்கு விதிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6.25 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைத்துள்ளது. எனவே வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். பணவீக்கத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago