20 சதவீதி பங்குகளை சவுதி நிறுவனத்திற்கு விற்றது ரிலையன்ஸ் நிறுவனம்

புதுதில்லி: கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனது எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக துறையில் உள்ள 20 சதவீத பங்குகளை சவுதி அரேபியா நிறுவனமான அரம்கோவுக்கு விற்று அடுத்தகட்ட அதிரடிக்கு தயாராகி உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, கடனே இல்லாத நிறுவனம் என்ற இலக்கை அடுத்த 18 மாதங்களில் கடன் இல்லாத நிறுவனம் என்ற பெயரைப் பெரும் வகையில் பாதை தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்திய ஏற்றுமதி நிறுவனமாக தற்போது ரிலையன்ஸ் இருப்பதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, கடந்த நிதி ஆண்டில், 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி செலுத்தி முன்னணியில் உள்ளதாகவும், ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34 கோடியை கடந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்த முகேஷ் அம்பானி.

ஜியோ மூலம் இந்தியாவில் புதிய தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது மற்ற துறைகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்த ஜியோஃபைபர் அறிவிப்பை நேற்று வெளியிட்ட முகேஷ் அம்பானி.

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் 20 விழுக்காடு பங்குகளை, ஐந்து லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வாங்க உள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய அந்நிய முதலீடாகும். இந்திய அளவிலும் இதுவே பெரிய அந்நிய முதலீடாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி அராம்கோ நிறுவனம் தினமும் 5 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பெரியதாக பங்குகளை விற்பனை செய்தது கிடையாது. அந்த நிறுவனத்தின் அதிகபட்ச வெளிநாட்டு பங்கு விற்பனை இதுதான். அதேபோல் இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு பங்கு விற்பனை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டிற்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று தெரிவித்த அம்பானி, ஜம்மு காஷ்மீருக்கான முதலீடுகள் குறித்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

மாதம் ரூ. 700 விலையில் ரிலையன்ஸின் ஜிகா ஃபைபர் சேவைகள் செப்டம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். நொடிக்கு 100 எம்.பி இணையவேகத்தில் ஜிகா ஃபைபரின் அடிப்படை பிளான் இருக்கிறது. நொடிக்கு 1 ஜி.பி இனையவேகம் வரையிலும் செல்லும். ஜிகா ஃபைபர் தொடக்க சலுகையாக 4கே தொலைக்காட்சி மற்றும் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜிகா ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக இருக்கிறது. ஜிகா ஃபைபர் மூலம் இந்தியாவில் ஒரு புதிய திரைப்படம் வெளியானால் அதே திரைப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்கக்கூடிய வசதியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ தொடங்கப்பட்டு இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையை மேம்படுத்தியது, தற்போது 340 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள நிலையில், பிராட்பேண்ட் சேவை வழங்குபவர்களுக்கு கவலையளிக்கும் விதமாக அடுத்த மாதம் அதிவேக இணையமான ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுகப்படுத்தவுள்ளது.

நிறைய கடன்களுடன் ஜியோ அறிவிப்பை தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அந்த கடன்களை அடைப்பதற்கவே தற்போது பங்குகளை விற்று இருப்பதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் பங்குகள் விற்பனையில் கடன்களும் சேர்த்து அடக்கமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: dinamani

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago