என்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா?

மும்பை: லோக்சபா தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசுகள் நலத்திட்டங்களுக்கு செலவிடும் பணத்தை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வங்கிகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ரொக்க பற்றாக்குறை ரூ.40,859 கோடியாக அதிகரித்துள்ளதாக புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரொக்க கையிருப்பானது சுமார் ரூ.15,857 கோடியாக இருந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால், இதன் தாக்கம் வங்கிகளின் வட்டி விகித பரிமாற்றத்திலும் எதிரொலிக்கக்கூடும் என்றும் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் பின்னர் ஏப்ரலிலும் வங்கிகளக்கு அளிக்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை குறைத்து குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அனைத்து வங்கிகளும் தங்களின் தினசரி பணப்பரிமாற்றத்தில், அதாவது வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குகளில் செய்யும் ரொக்க டெபாசிட் (Cash Deposit) மற்றும் ரொக்க எடுப்புகள் (Cash Withdrawl) போக மீதமுள்ள ரொக்க இருப்புகளை (Surplus Cash) ரிசர்வ் வங்கிகளுக்கு மாற்றிவிடுவது வழக்கம்.

சில நாட்களில் ரொக்க டெபாசிட்களை விட ரொக்க எடுப்புகள் (Withdrawl) அதிகமாக இருக்கும்போது வங்கிகளின் ரொக்க இருப்பு பற்றாக்குறையாக (Shotage or deficit) மாறிவிடும். இதை சரிக்கட்ட ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதற்கு வங்கிகள் வட்டி அளிக்கின்றன.

தற்பொழுது லோக்சபா தேர்தல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும் தேர்தல் நடைமுறை கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டபடியால், நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் மத்திய அரசும் மாநில அரசுகளும் அத்தியாவசியத் தேவைகளான சம்பளம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கின்றன.

நன்னடத்தை விதிகளின் காரணமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில், ரொக்கப் பரிமாற்றமும் அடியோடு குறைந்துவிட்டது. இதனால் அரசு கருவூலகத்திலிருந்து வங்கிகளுக்கு செல்லும் ரொக்கமும் தடை பட்டுள்ளது. இதனால் வங்கிகளிலும் பணப்புழக்கம் அடியோடு குறைந்துவிட்டது.

தேர்தல் வரும் என்பதால் அதற்கு முன்பாக மார்ச் மாதம் வரையிலும், மத்திய மாநில அரசுகளும் வாக்காளர்களை கவர்வதற்காக, இதுவரையிலும் செயல்படுத்தாத சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றவும் பிற உதவிகளை நிறைவேற்றவும் தேவைப்படும் ரொக்கத்தை அளவுக்கு அதிகமாக எடுத்து இருப்பு வைத்து பயன்படுத்தி இதனால் மார்ச் மாதம் வரையிலும் பணப்புழக்கம் தாராளமாக இருந்து வந்தது.

அதேபோல் எதிர்கட்சிகளும் உதிரிக்கட்சிகளும் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்களின் மூலமாக பணத்தை எடுத்து பதுக்கி வைத்து வாக்காளர்களை கவனித்துக்கொண்டு வருகின்றன. இப்படி ஆளும் அரசுகளும் எதிர்கட்சிகளும் போட்டி போட்டு பணத்தை சூறையாடுவதால் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பெரும்பாலான நேரங்களில் பணமே இருப்பதில்லை என்று சாமானிய மக்கள் புலம்புகின்றனர். முக்கியமாக 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டதோ என்று வாயடைத்துக் கிடக்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் இந்த கபளீகரத்தால், அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களிலும் பணப்புழக்கம் சரளமாக கிடைப்பதற்கு இன்னும் குறைந்த பட்சம் 2 வாரங்களாவது ஆகும் என்று தெரிகிறது. வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகே வங்கிகளிலும் பணப்புழக்கம் அதிகரித்து ரொக்க இருப்பு கூடும் என்றும் அதுவரையிலும் இந்த பற்றாக்குறை இருப்பு (Liquidity crunch) சிக்கல் நீடிக்கவே செய்யும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.

சில நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் கூட பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலித் தொகையை அளிப்பதற்காக வங்கிகளை அனுகினால், அங்கே சில மணி நேரம் வரையிலும் பணத்திற்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

வங்கிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து விளக்கமளித்த எஸ்பிஐ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சவும்யா கந்தி கோஷ் (Soumya Kanti Ghosh), மத்திய அரசின் செலவினங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே முடக்கப்பட்டுவிட்டதால் அதன் தாக்கம் வங்கிகளிலும் எதிரொலித்து எப்போதும் இல்லாத அளவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்றார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago